
தேகம் காக்கும் தேங்காய்ப் பூ! (மருத்துவம்)
தேங்காய்ப் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியாகும். தேங்காய்ப்பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கின்றன. தேங்காய்ப்பூவிமிக அதிக ஊட்டச்சத்து இருப்ல்தால் நோய் எதிர்ப்புச் சக்தி இருமடங்காக அதிகரிக்கிறது. பருவகால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும்.தேங்காய்ப் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. இதயநோய்களிலிருந்து காப்பாற்றுகிறது.மனஅழுத்தம் அல்லது வேலைப்பளு காரணமாக சாப்பிட முடியாதபோது தேங்காய்ப் பூவை சாப்பிட முழுசக்தி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமளித்திடும். ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த நிவாரணம் தரும். இதிலுள்ள புரதம், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கிறது. தைராய்டு பிரச்சனையை சரிசெய்கிறது. தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது.
தேங்காய்ப்பூ பிரிரேடிகல்ஸை வெளியேற்றி செல்களை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சிறுநீரகப் பாதிப்பை தேங்காய்ப்பூ குறைக்கிறது. சிறுநீரக தொற்றுநோய்களை குணப்படுத்தும். நச்சுகளை வெளியேற்றி சிறுநீரகத்தை காக்கிறது. உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் உடல்எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல்எடை குறையும். இதில் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமதொய்வு போன்றவற்றை தடுக்கிறது. சூரியனால் ஏற்படும் சருமப் பாதிப்புகளை தடுக்கிறது.
யோகாப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி மூலம் நமக்கு HDP அளவு அதிகமாகும். ஆனால், 10km நடைப்பயிற்சி மூலம் கிடைக்க வேண்டிய எபெக்ட் தேங்காய்ப்பூ சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும். தேங்காய்ப் பூவில் காப்பர், அயன், ஜிங்க் அதிகமாகவே இருக்கிறது. அதனால், சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக்குகிறது. கொழுப்பு அமிலம் (fattiacid) குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் நல்ல கொலஸ்ட்ரால் நம் உடம்புக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.