பல் சொத்தை விடுபட எளிய வழிகள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 4 Second

கை கால்களில் வரும் வலியைவிட பல் வலி மற்றும் காது வலி மிகவும் கொடுமையானது. அதிலும், குறிப்பாக பல் சொத்தை வந்துவிட்டால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் கவனம் தேவை. ஏதேனும் ஒரு உணவானது சொத்தை பல்லில் சிக்கிக் கொண்டால், உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்பட்டுவிடும். பல் சொத்தையானது, அதிக அளவு இனிப்பு பொருட்கள் மற்றும் சூடான அல்லது குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. இந்த பல் சொத்தைக்கு வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே சரிசெய்யலாம். அவை என்னவென்று பார்ப்போம்:

இயற்கை பல் பொடி

தேவையானவை

மிளகு – அரை தேக்கரண்டி
கிராம்பு – 6

செய்முறை: மிளகு மற்றும் கிராம்பை உரலில் இட்டு நன்றாக தட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதில் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். இந்து உப்பாக இருந்தால் மிகவும் நல்லது. இதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இதனை விழுதாக நன்கு குழைத்துக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஈரம் இல்லாத ஹேர் டைட் கன்டைனரில் இந்த கலவையை சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

ஏழிலிருந்து பத்து நாட்கள் வரை இதனை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.சொத்தைப் பல், தீராத பல் வலி இருப்பவர்கள் சொத்தை, பல்லின் மேல் இந்த பற்பொடியை சிறிதளவு எடுத்து வைக்க வேண்டும். 5 நிமிடம் வைத்திருந்தால் வாயில் உமிழ்நீர் ஊறும். அதனை விழுங்கிவிடாமல் வெளியே துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர, பல்வலி, வீக்கம் அனைத்தும் குணமாகும்.

பல் வலியில் இருந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் இதனை பேஸ்ட் ஆக தினம்தோறும் பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பேஸ்ட்டினால் பல் துலக்கினால் போதுமானது.மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமாகும். பற்களும் வெண்மையாக இருக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா!! (மருத்துவம்)
Next post திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வரும் பாலியல் நோய்..!! (அவ்வப்போது கிளாமர்)