பித்தத்தை நீக்கும் புதினா!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 57 Second

*புதினாவை சமையலில் சேர்த்து சமைத்தால் அதன் மணம் உணவுப் பொருட்களின் சுவையைக் கூட்டும். புதினா இலைகள் உடம்பின் பல நோய்களுக்கு மருந்துகளாகவும் பயனளிக்கும்.

*புதினா இலைகளை சுத்தம் செய்து, துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பித்தம் நீங்கும்.

*டீ தயாரிக்கும் போது, டீ தூளுடன் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

*புதினாவை வெந்நீர் காய்ச்சும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பித்தத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும்.

*பச்சையாக வெங்காயத்துடன் உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.

*ஆவாரம் பூவைக் காய வைத்து, பொடி செய்து டீத்தூளுக்கு பதிலாக உபயோகப்படுத்தினால் சுவை மிக்க டீ கிடைப்பதுடன் பித்தம், வாந்தி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

*பித்தம் சம்பந்தமான நோய்களை நீக்கும் வலிமை கொத்தமல்லிக்கு உண்டு. சுக்கு, தனியா, கருப்பட்டி மூன்றையும் கலந்து, காப்பி தயாரித்து குடித்தால் பித்தம் நீங்கி விடும்.

*அகத்திப்பூ பித்தத்தை போக்க வல்லது. மேலும் உடல் அழற்சியையும் போக்கும். பூவை உணவில் சேர்த்து வந்தால் போதும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மரபு மருத்துவத்தில் மலச்சிக்கலை நெறிப்படுத்தும் முறை!! (மருத்துவம்)
Next post படுக்கையில் சிறப்பாக செயல்பட… நீங்க கொஞ்சம் வெஜிடேரியனா மாறுங்க..!! (அவ்வப்போது கிளாமர்)