வயிற்றைக் காக்கும் ஓமம்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 33 Second

ஓமவாட்டர் வீட்டில்  இருந்தால் சிறு குழந்தை  முதல் பெரியவர்கள்  வரை வயிறு  உபாதையின்றி  வாழலாம்.

ஓமத்தை  பொடித்து  உச்சந்தலையில்  வைத்து  தேய்த்தால்  ஜலதோஷம்  குறையும்.ஓமப்பொடியை  துணியில்  கட்டி நுகர்ந்தால்  மூக்கடைப்பு  நீங்கும்.
தினமும்  ஓமத் தண்ணீர்  குடித்தால்  ஆஸ்துமா  நோய் வரவே  வராது.அரை தேக்கரண்டி  ஓமத்தை ஒரு லிட்டர்  தண்ணீரில்  போட்டுக் கொதிக்க  வைத்துக் குடித்தால்  ஆஸ்துமா  அண்டாது.  வயிற்றில்  செரிமானம்  சீராகும். வயிற்றுவலி ஏற்பட்டால்,  ஐந்து கிராம் ஓமத்துடன்  சிறிது உப்பு, பெருங்காயம்  சேர்த்துப் பொடித்து  தேனில்  குழைத்துச் சாப்பிட்டால்  சிறிது நேரத்தில்  வயிறு  லேசாகிவிடும்.

நாட்டு மருந்துக்கடைகளில்  ஓம எண்ணெய்  கிடைக்கும்.  மூட்டுவலிக்கு  இதைத் தடவினால்  நாளடைவில்  மூட்டு வலி குணமாகும்.  இந்த எண்ணெயைப்  பஞ்சில் தோய்த்து  பல் மீது வைத்து  அழுத்திக்கொண்டால்  பல் வலி  மறையும்.வயிறு  கடமுடா  வென சத்தம்  போட்டால்,  ஓம எண்ணெயை  வயிற்றின் மீது தடவலாம். ஓமப்பொடி  சிறிது,  உப்பு சிறிது,  ஆகியவற்றை மோரில்  கலந்து குடித்தால்,  நெஞ்சில்  பிடித்துள்ள  சளி வெளியேறும்.

உடல் பலம் பெற

சிலர் எவ்வளவு  சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள்.  இன்னும் சிலர் பார்க்க  பலசாலி போல்  தோற்றமளிப்பார்கள். ஆனால்  மாடிப்படி  ஏறி  இறங்கினாலோ  அல்லது  சிறிய  பொருளை  தூக்கினாலோ  உடனே சோர்ந்து  போவார்கள்.   இவர்கள்  ஓமத்தை  நீரில் கொதிக்க  வைத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து  காலைவேளையில்  அருந்திவந்தால்  உடல் பலம்பெறும்.
வயிற்றுப்  பொருமல் நீங்க

சிறு குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல்,  வயிற்றுவலி,  அஜீரணக் கோளாறு  உள்ளவர்கள் 100  கிராம் ஓமத்தை 1 லிட்டர்  தண்ணீர்விட்டு கொதிக்க  வைத்து அது பாதியாக  வந்தவுடன்  எடுத்து  அருந்தினால் மேற்கண்ட  அனைத்தும்  தீரும். ஓமம்,  மிளகு  வகைக்கு  35 கிராம்  எடுத்து  நன்கு இடித்து  பொடியாக்கி  அதனுடன் 35  கிராம் பனை வெல்லம்  சேர்த்து அரைத்து காலை, மாலை  என இருவேளையும் 5  கிராம்  அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் பொருமல்,  கழிச்சல்,  வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
புகைச்சல் இருமல் நீங்க

சிலருக்குத்  தொண்டையில் புகைச்சல்  ஏற்பட்டு  இருமல் வரும். இவர்கள் ஓமம். கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம்,  திப்பிலி வேர் இவைகளின் பொடியை  சம அளவு  எடுத்து  அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு  சேர்த்து  காலை, மாலை  சாப்பிட்டு வந்தால்  தொண்டை  புகைச்சல் மற்றும்  இருமல்  நீங்கும்.
 மந்தம்

பொதுவாக  மந்தமானது  சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும்.  மந்தம்  இருந்தால்  உடல் சோர்வுற்று, அஜீரணக்கோளாறு  உண்டாகும்.  இத்தகைய  மந்தத்தைப் போக்க ஓமம்,  சுக்கு,  சித்திரமூல  வேர்ப்பட்டை,  இம்மூன்றும்  சமபங்கு  எடுத்து  ஒன்றாகச்  சேர்த்து  பொடித்து  அதனுடன் கடுக்காய்ப்பொடி சேர்த்து  அதில்  சிறிதளவு  எடுத்து  மோரில்  கலந்து  கொடுத்தால்  மந்தம் நீங்கும்.

தொப்பையைக் குறைக்க

தினமும்  இரவில்  தூங்கப் போகும் போது அன்னாசிப்பழம்  நான்கு   துண்டுகள்  மற்றும்  பொடி செய்தஓமம்  இரண்டு  தேக்கரண்டி  இவை இரண்டையும்  தண்ணீரில்  விட்டு கொதிக்கவிட வேண்டும். அவை நன்கு  வெந்தவுடன்  அதை அப்படியே  மூடிவைத்துவிட  வேண்டும்.  காலை 5 மணிக்கு   எழுந்து  அதனை நன்றாக  கரைத்து  குடிக்க  வேண்டும்.  இவ்வாறு  15 நாட்கள்  செய்து  வந்தால்   தொப்பை  காணாமல்  போய்விடும்.

இடுப்பு வலி நீங்கசிறிது தண்ணீரில்  ஒரு கரண்டி  ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில்  100 மில்லி தேங்காய்  எண்ணெயை  விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி  கொள்ளுங்கள். வடிகட்டியதோடு  கற்பூரப்பொடியைக் கலந்து  இளஞ்சூட்டுடன்  இடுப்பில்  நன்றாகத் தேய்த்து வர இடுப்புவலி நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தேகம் காக்கும் தேங்காய்!! (மருத்துவம்)
Next post கரகாட்டம்!! (மகளிர் பக்கம்)