கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா?..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 45 Second

கருவைச் சுற்றி ‘ஆம்னியான்’(Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும்.

நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதிகள் உடலுறவு கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது நல்லது. அது வெறும் மூன்று மாதங்களுக்குத்தான்.

முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம்.

முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix)திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்னைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் வேண்டும். அதோடு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

கர்ப்பிணிக்கு எந்த நிலை சவுகரியமோ அதுதான் சரியான நிலை. குறிப்பாக கணவனின் எடை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓர் உதாரணம்… இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த நிலையில் உறவு கொள்வது. அதேபோல், படுக்கை அறையில் முரட்டுத்தனம் கூடாது.

கலவிக்கு முன்னர் இருவருமே பிறப்பு உறுப்புகளை நன்கு சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தொற்றுக் கிருமிகள் கர்ப்பிணியையும் சிசுவையும் பாதிக்கும். வாய் வழி (Oral sex)உறவினையும் தவிர்த்தல் வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ்டிங்களில் டீன் பருவத்தினர் ஈடுபட காரணங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post காம தேடலில் வெட்கத்தை ஓரம் கட்டு…!! (அவ்வப்போது கிளாமர்)