நலம் தரும் நாட்டு வைத்தியங்கள் 7!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 30 Second

1. சீரகம்: சீரகத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குக் குளித்துவர சோர்வு, மயக்கம், கண்நோய், தலைவலி, மந்தம் தீரும். சீரகத்தைப் பொடித்து தினமும் காலை, இரவு சாப்பிட்டுவர, வயிற்று உபாதைகள், அஜீரணம், வயிற்றுப் புண் குணமாகும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.  சீரகத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்திவர செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

2.சுக்கு : சுக்கை வாயில் இட்டு மெல்ல பல்வலி தீரும்; அரைத்துப் பற்றுபோட  தலைவலி தீரும்.

* சுக்கை வெந்நீரில் அரைத்து பற்று போட மூட்டுவலி வீக்கம் குறையும்.

* சுக்கை பொடித்து அரை சிட்டிகை பாலில் கலந்து சாப்பிட, நன்கு பசி உண்டாகும்.

3.ஓமம் :
ஒரு ஸ்பூன் ஓமத்தை  வெந்நீரில் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்த, வயிற்றுவலி, வயிற்றுவலி அஜீரணம் தீரும்.ஓமப் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால், வயிற்று மந்தம், வாயுத் தொல்லை நீங்கும்.

4.சாதிக்காய்: சாதிக்காயைப் பொடித்து நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்த, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வயிற்றுபோக்குத் தீரும்.
சாதிக்காயைப் பொடித்து தினமும் ஒரு வேளை தேனில் சாப்பிட்டுவர, ஆண்மைப் பெருகும், விந்து கெட்டிப்படும்.

5.எள் : எள்ளை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட, குருதி மூலம் நீங்கும்.
எள்ளை உணவில் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் எடை கூடும். வலு அதிகரிக்கும்.
எள் எண்ணெயைக் கோழிமுட்டையின் வெள்ளைப்பகுதியுடன் கலந்து, பருக்கள், கட்டிகள் மீது பூச, கட்டிகளின் வலி நீங்கும். கட்டிகள் மறையும்.
எள்ளுப் பிண்ணாக்கைத் தினம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

6.மிளகு : தலையில் புழுவெட்டு உள்ளவர்கள், மிளகுதூளுடன் சிறிது வெங்காயச்சாறு, உப்புக் கலந்து பூசிவர நல்ல பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் முடி முளைக்கும். மிளகுப் பொடியையும் சோம்புப் பொடியையும் சம விகிதத்தில் எடுத்துகொண்டு சிறிது தேனில் கலந்து சாப்பிட மூலநோய் நீங்கும்.

7.ஆமணக்கு எண்ணெய் :
கண் நோய்களுக்கு ஆமணக்கு எண்ணெய் நல்ல தீர்வு. உணவில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துவந்தால், பார்வைத்திறன் மேம்படும். கண்கள் பலமாகும். சருமத்தைப் பாதுகாத்து, மலசிக்கல், மலகட்டைப் போக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவில் செயல்திறனை அதிகரிக்க சூப்பரான 7 டிப்ஸ்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தாய்ப்பால் குறைவைப் போக்கும் அம்மான் பச்சரிசிக் கீரை! (மருத்துவம்)