வாசகர் பகுதி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 3 Second

*வாழைப்பூ: மாத விலக்கின் போது அதிக ரத்த போக்கை தடுக்க வாழைப்பூவின் சிவப்பு மடல்களை பிரித்து பூக்களை எடுத்து மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டிய பூச்சாறுடன் பனங்கற்கண்டு  சேர்த்து சாப்பிட்டால் உடனே ரத்தப் போக்கு குறையும்.

*ஜாதிமல்லி: சிலருக்கு மாதவிலக்கு சரியாய் வராது. வலியோடு வந்தாலும் ஜாதிமல்லி ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்ஸ் ஒரு வாரம் சாப்பிட வலி சரியாகும்.

*செம்பருத்திப்பூ:
செம்பருத்தி பூ ஒரு பிடி, அதே அளவு தேங்காய் எண்ணை கலந்து அடுப்பில் வைத்து பூவின் ஈரத்தன்மை போகும் வரை காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வைத்து இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி நன்கு வளரும்.

*ரோஜாப்பூ: ரோஜாப்பூ உடலுக்கு பலம் தரும். கர்ப்பிணிகள் ரோஜா இதழ்கள் சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். ரோஜா சாறை மூக்கில் சில சொட்டு விட்டால் தலைவலி நீங்கும். நெய்யில் வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.

*பிச்சிப்பூ: இது அம்பிகைக்கு ஏற்ற அற்புதமான மலர். இதை கண்ணில் வைத்து கட்டினால் குளிர்ச்சியாக இருக்கும்.

*அரளிப்பூ: அரளிப்பூ சூடினால் பேன்கள் ஓடி விடும். இது கூந்தல் உதிராமல் பாதுகாக்கும்.

*அகத்திப்பூ:
குண்டாக இருப்பவர்கள் தங்கள் உடல் மெலிய ஏற்ற உணவு அகத்திப்பூ. இதை பொரியல் வைத்து சாப்பிட்டால் வாத நோய் நீங்கும்.

*முல்லைப்பூ: முல்லைப் பூவை அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

*செண்பகப்பூ: செண்பக மலரை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து நன்றாக அரைத்துக் கண்களைச் சுற்றிப் பற்றுப்போட கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு நீங்கும்.

*மருதாணிப் பூ :
கொத்தாகப் பறித்து தலையில் வைத்துக் கொண்டால் தூக்கம் நன்றாக வரும். நன்றாகக் காயவைத்து அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு குறைந்து விடும். தலையில் உள்ள பொடுகானது பறந்தே போய் விடும்.

*மாம்பூ : நன்கு உலர வைத்த மாம்பூவைக் கொண்டு கஷாயம் செய்து பருகினால் சீதபேதி நின்றுவிடும். மாம்பூ ஐம்பது கிராம், சீரகம் 50 கிராம் இவற்றை நன்றாக பொடி செய்து பின்னர் சர்க்கரையைச் சேர்த்து அருந்தினால் மூலவாயு குணமடையும். மாம்பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தயிர் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

*சூரிய காந்திப் பூ : இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடானது தணியும்.

*வெங்காயப் பூ : நீரில் போட்டு ஊறவைத்து வடிகட்டி குடி நீராக இரு வேளை சாப்பிட்டால் மாதவிடாய் நோய்கள் இரண்டு நாட்களில் நீங்கி விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதல் முறை உடலுறவை பெண்கள் எப்படி இருக்கும்?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஜீரணத்தை தூண்டும் சின்ன வெங்காயம்!! (மருத்துவம்)