சுய இன்பம் சரியா?… தவறா?…!! (அவ்வப்போது கிளாமர்)
விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதலாகவே பலருக்கும் சுய இன்பத்தில் ஈடுபடும் பழக்கம் உண்டு. நிறைய பேர் அதில் மூழ்கிப் போய்விடுகிறார்கள்.
பலருக்கு சுய இன்பத்தில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை உண்டு. ஆனால் அது சரியா? தவறா? என்ற குழப்பத்தில் சுயஇன்பம் மேற்கொள்ளத் தயங்குகிறார்கள்.
ஆனால் உண்மை தான் என்ன?… தெரிஞ்சிக்கணுமா?…
கைப்பழக்கம், சுய இன்பம் என்று சொல்லப்படுகிற இதை ஆங்கிலத்தில் masturbation என்று குறிப்பிடுவார்கள். இது ஒரு வகையான சுய திருப்தி நடவடிக்கை தான்.
எப்படி குழந்தைகள் தாய்ப்பாலுக்காக ஏங்குகின்றனவோ, தங்களுடைய கட்டைவிரலை வாயில் வைத்து சூப்புவதன் மூலம் கொஞ்சம் திருப்தியடைகின்றனவோ அதுபோலத்தான் சுயஇன்பமும்.
அதுபோல தான் ஆணுக்கோ பெண்ணுக்கோ எதிர்பாலினத் துணை ஒருவர் அருகில் இல்லாத போது சுயஇன்பத்தில் ஈடுபடுவது என்பது இயல்பானது தான்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, யானை, புலி, சிங்கம், குரங்கு போன்ற பல விலங்குகளும் சுய இன்பம் அனுபவிக்கின்றனவாம்.
இந்த சுயஇன்பம் என்பது மனஇறுக்கம், இச்சை ஆகியவற்றிலிருந்து விடுபடக்கூடிய ஒரு சாதாரண நிவாரண நடவடிக்கை தான். இது நோயோ அல்லது கோளாறோ கிடையாது. அதனால் பயம் கொள்ளத் தேவையில்லை.
நம்முடைய மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால், எல்லா விஷயங்களையுமே அளவோடு வைத்துக்கொள்ள முடியும். சுய இன்பத்தையும் சேர்த்து.