பீட்ரூட் ஜூஸின் நன்மைகள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 8 Second

பீட்ரூட்டில் கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், சோடியம், காப்பர், செலினியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், வாரத்திற்கு மூன்று நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வர, உடலில் ரத்த அணுக்கள் அதிகரித்து , ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
பீட்ரூட்டில் கலோரி அளவு குறைவாக இருக்கிறது, மேலும், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மதிய சாப்பாட்டிற்கு முன்பு பீட்ரூட் ஜூஸ் அருந்தி வர, உடலில் கொழுப்பின் அளவை சமநிலையில் வைத்து, எடை குறைய உதவும்.

பீட்ரூட் ஜூஸ் 250 மி.லி. அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வர, உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைக்கும். பீட்ரூட் ஜூஸில் எந்த விதமான கொழுப்புகளும் இல்லை. மேலும், குறைந்த கலோரிகளே உள்ளதால். உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது. இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு தசைகளை வலிமை பெறச் செய்யும் ஆற்றல் பீட்ரூட் ஜூஸில் உள்ளது.

புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி இதற்கும் உண்டு. மேலும், உடலில் உள்ள தேவையற்ற செல்களை கண்டறிந்து அழிக்கும் வல்லமை உடையது. கல்லீரல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது. அல்சர் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முறை குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.செரிமானப் பிரச்னை இருப்பவர்கள் தினமும் இந்த ஜூஸ் அருந்தி வந்தால் கோளாறுகள் நீங்கும். மூலநோய் உள்ளவர்கள் கஷாயமாக செய்து குடித்து வர விரைவில் மூல நோய் குணமாக்கும்.

சரும அரிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் சிறிது படிகாரப் பொடி கலந்து அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி வர, அரிப்பு நீங்கும்.பித்தம் உள்ளவர்கள், அடிக்கடி வாந்தி எடுப்பவர்கள் பீட்ரூட் ஜூஸை அருந்தி வர விரைவில் குணமாகும்.சிறுநீரகப் பிரச்னை, கால்சியம் குறைபாடு, வயிற்றுப் போக்கு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் இந்த ஜூஸை மருத்துவர் ஆலோசனை பெற்றே குடிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post விபத்து கால முதலுதவிகள்…!! (மருத்துவம்)