கீர்த்தி சுரேஷ் ஃபிட்னெஸ்…!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 27 Second

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி.. ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் தொடர்ந்து, முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இன்றைய முன்னணி நடிகைகளில்  ஒருவராக இருப்பவர்  கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்திரியின்  வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து மக்களின் உள்ளத்தை கொள்ளைகொண்ட இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என அனைத்திலுமே முன்னணி நாயகியாக இருந்துவருகிறார்.  கீர்த்தி  தனது ஃபிட்னெஸ்  குறித்து  பகிர்ந்து கொண்டவை:

டயட்:   உடலை பிட்டாக  வைத்து கொள்ள ஆரோக்கியம்  மிகவும் முக்கியம். எனவே,  என்னுடைய  ஆரோக்கிய விஷயத்தில்  நான் மிகவும்  கவனமாக இருப்பேன். ஆரோக்கியத்தில், முக்கிய பங்கு  வகிப்பது உணவும் உடற்பயிற்சியும்தான்.  உணவைப் பொருத்தவரை, அசைவம்  சாப்பிடுவதில்லை. வெஜிடேரின் உணவுகளைத் தான்  விரும்பி சாப்பிடுவேன்.  அதிலும், குறிப்பாக என்னுடைய ஃபேவரைட் டயட் வேகன் (vegan diet) தான்.

காலை உணவாக, பெரும்பாலும் பாலும் கார்ன் பிளேக்ஸ், மியூஸ்லி போன்ற செரல் வகைகள் (cerals). எடுத்துக் கொள்வேன்  அல்லது பிரௌன் பிரட்டுடன் முட்டையின் வெள்ளைக் கருவில் செய்யப்பட்ட ஆம்லெட் எடுத்துக்கொள்வேன். இவ்வளவுதான்  எனது பிரேக்பாஸ்ட்.அதுபோன்று, மதியத்தில், சப்பாத்தி, ரொட்டி வகைகளுடன் பருப்பு (தால்), ஏதேனும் காய்கறிகள் மற்றும் சாலட் சாப்பிடுவேன்.

இவ்வளவு தான் எனது  மதிய உணவு.காலை, மதியம் இரண்டு வேளையுமே லைட்டான உணவுகளை எடுத்துக் கொள்வதால் நிச்சயம் மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வேன். அதுவும், முளைகட்டிய பயறு வகைகள் (sprouts), பழங்கள் அல்லது பழச்சாறு  போன்றவற்றை  எடுத்துக்கொள்வேன்.பெரும்பாலானோர் மதியம் அரிசி சாதம் எடுத்துக்கொண்டு, இரவில் சப்பாத்தி சாப்பிடுவார்கள். ஆனால் நான் மதியம் சப்பாத்தி எடுத்துக் கொள்வதால் இரவு நேரத்தில் அரிசி சாதமும் பருப்பும் கட்டாயம் எடுத்துக்கொள்வேன். மேலும்,  ஏதாவது ஒரு சாலட் (அல்லது) வெஜிடபிள் சூப் போன்றவையும்  கட்டாயம் இருக்கும்.  இவைதான் எனது  தினசரி உணவுமுறையாகும்.

எக்காரணம் கொண்டும் இந்த முறையை மாற்றுவதில்லை. மேலும்,  ஒரு நாளைக்கு இவ்வளவு கலோரிகள்தான் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கணக்கு வைத்திருக்கிறேன். அதைத் தாண்டி  எப்போதும் சாப்பிடுவதே கிடையாது. இந்த ஹெல்தி டயட் தான்  எனது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு என்னுடைய சருமத்தையும் பளபளப்பாகவும் பொலிவுடனும் வைத்திருக்க  உதவுகிறது.

உடற்பயிற்சி: உணவுக்கு எவ்வளவு  முக்கியத்துவம் கொடுக்கிறேனோ  அதே அளவு எனது உடற்பயிற்சிக்கும்  முக்கியத்துவம்  உண்டு. எதற்காகவும்  தினசரி உடற்பயிற்சியை  தவிர்க்க மாட்டேன்.  அதிலும், குறிப்பாக,  அரைமணியிலிருந்து 1 மணி  நேரம் வரை யோகா செய்வேன்.  

வாரத்திற்கு மூன்று நாளாவது, ஜிம்முக்கு சென்று எடையை நிர்வகிக்கும் பயிற்சிகளையும் கார்டியோ பயிற்சிகளையும் மேற்கொள்வேன். கார்டியோ  பயிற்சிகள் உடலில்  சேரும்  அதிகப்படியான  கொழுப்பை எரிக்க உதவுகிறது. அதுபோன்று, வீட்டில் நேரம் கிடைக்கும்போது எல்லாம் திரட்மில்லில் பயிற்சிகள் செய்வேன். ஓய்வுநேரங்களில் சின்னசின்ன விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்வேன்.

பியூட்டி:  ஒருவரது அழகின் ரகசியமே  அவரது சருமம் பளபளப்பாக இருப்பதுதான்.  எனவே, எனது சருமத்தை  பளபளப்பாக  வைத்திருக்கவும்,  உடல் ஆரோக்கியத்தைப்  பேணி காக்கவும்  அதிக அளவில் தண்ணீர் குடிப்பேன். ஷூட்டில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சருமப் பராமரிப்புக்காக எனது தினசரி  ரொட்டீன்னில்  CTM எனக் கூறப்படும் கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங்கை தவறாமல் கடைபிடிப்பேன்.

மேலும், எனது ஸ்கின்கேருக்காக, எப்போதும்,  ஆர்கானிக்  ஸ்கின் கேர் தயாரிப்புகளையே பயன்படுத்துவேன். கெமிக்கல் புராடக்ஸ்களை முடிந்த வரை தவிர்த்துவிடுவேன். மேக்கப் போடும்பொழுது முடிந்த வரை ஃபவுண்டேஷனை தவிர்த்து விடுவேன்.  ஏனென்றால் ஃபவுண்டேஷன் ஹெவி கவரேஜ் கொடுப்பதனால் சருமத்தின் போர்ஸ்களை அடைத்துக் கொள்ளும். அதனால் முடிந்த வரையில் ஃபவுண்டேஷனுக்கு பதில் கவரேஜுக்காக பிபி கிரீம் உபயோகிப்பேன்.

அதுபோல, ஷூட்டிங் இல்லாத சமயத்தில்  மேக்கப்பை தவிர்த்து விட்டு, மிகவும் சிம்பிளான லுக்கில்தான்  வீட்டில்  இருப்பேன்.  அதுபோன்று, எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சரி,  ஷூட்டிங் லேட் நைட் முடிந்தாலும் சரி,  இரவு படுக்கச் செல்லும் முன்பு எனது மேக்கப்பை ரிமூவ் செய்துவிட்டுதான்  தூங்குவேன். அதுபோல  தலைமுடியை  பராமரிக்க,  தினசரி, தேங்காய் எண்ணெயை வைத்து குளிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இவைதான் எனது ஃபிட்னெஸ்  சீக்ரெட்ஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ் மொழியில் வீட்டை அலங்கரிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
Next post உங்க ராசிய சொல்லுங்க… உங்க அந்தரங்க வாழ்க்கையப் பத்தி தெரிஞ்சிக்கோங்க…!! (அவ்வப்போது கிளாமர்)