16 வயதில் தொழில்முனைவோராக கைகோர்த்திருக்கும் நண்பர்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 43 Second

எலிஷா, வீர் கபூர் இருவரும் நண்பர்கள். மும்பையை சேர்ந்த இவர்கள் Cakeify என்ற பெயரில் டி.ஐ.ஒய் பேக்கிங் ஸ்டார்ட் அப் தொடங்கி ஒன்பது மாதங்களில் 3 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்கள்.

‘‘எனக்கு ஏழு வயசு இருக்கும் போதே பேக்கிங் செய்ய பிடிக்கும். வீட்டில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அப்போது இருந்தே சிறிய அளவில் கேக்குகளை பேக் செய்வேன். வீர் என்னுடைய நண்பன். அவனுக்கு ஸ்வீட் என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் நான் செய்யும் கேக்குகளை விரும்பி சாப்பிடுவான். ஆனால் அந்த வயதில் இது எங்களின் ஒரு ஸ்டார்டப் ெதாழிலாக மாறும்ன்னு நாங்க நினைக்கல. நான் வளர வளர பல விதமான கேக்குகள் மற்றும் குக்கீஸ்களை செய்ய கற்றுக் கொண்டேன்.

அதை ஆன்லைன் முறையில் விற்பனையும் செய்து வருகிறேன். அந்த சமயத்தில் தான் நானும் வீரும் சேர்ந்து உணவு குறித்து ஒரு ஸ்டார்டப் நிறுவனம் ஆரம்பிக்கலாம்ன்னு திட்டமிட்டோம். நான் ஏற்கனவே கேக்கு களை பேக் செய்து ஆன்லைனில் விற்பனை செய்து வருவதால், அதையே வேறு மாதிரியாக கொடுக்க நினைச்சோம். அதற்காக மக்கள் எந்த உணவினை எப்படி சாப்பிட விரும்புகிறார்கள் என்பது குறித்து ஆய்வில் இறங்கினோம். அப்போது மக்களுக்கு இனிப்பு மற்றும் கேக் போன்ற உணவுகள் மீது அதிக அளவு ஆர்வம் இருப்பது குறித்து தெரிந்து கொண்டோம். கேக்கை அப்படியே விற்காமல் அதன் மூலப்பொருட்களை மட்டும் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அப்படித்தான் ‘Cakeify’ என்கிற டி.ஐ.ஒய் (Do it yourself) பேக்கிங் ஸ்டார்ட் அப்பை துவங்கினோம்.

இந்த ஸ்டார்ட் அப் பேக்கிங் செய்வதற்குத் தேவையானப் பொருட்களை ஒரு தொகுப்பாக கொடுத்திடுவோம். மேலும் அதை எப்படி செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் கேக்கினை பேக் செய்ய ேவண்டும் என்று குறிப்பும் இருக்கும். அதில் இருப்பதை பின்பற்றினால் போதும், நீங்களே உங்கள் கையால் உங்களுக்கு பிடித்த கேக்கினை நொடியில் தயார் செய்துவிடலாம். முதலில் கேக் மிக்ஸ், ஃப்ராஸ்டிங் ஆகியவற்றை மட்டுமே வழங்க திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் இது போன்ற ரெடி டூ பேக் கிட்களை பல பிராண்டகள் கொடுப்பதால், நாங்க ஒரு முழுமையான பேக்கிங் கிட் தொகுத்து வழங்க முடிவு செய்தோம். கேக் செய்ய தேவைப்படும் மாவு மற்றும் ஃப்ராஸ்டிங், ஸ்பிரிங்கிள்ஸ், பேக்கிங் அச்சு, அளக்க உதவும் கப் எல்லாமே அந்த கிட்டில் இருக்கும். பால், வெண்ணெய், எண்ணெய் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும், கேக் தயாராகிவிடும். பல பிராண்டுகள் ரெடிமேட் கேக் மிக்ஸ்களை கொடுக்கிறார்கள். அதில் அவர்கள் ஒரு ஸ்பூன் அளவுன்னு குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் நம்மிடம் உள்ள ஸ்பூன் அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் அளவிற்கு நிகரானதான்னு சொல்ல முடியாது. அதனால் கேக்கின் தன்மை மாறுபட வாய்ப்புள்ளது. அதனால் அளவு கப் மற்றும் ஸ்பூன் எல்லாம் கிட்டுடன் தருகிறோம்’’ என்றார் எலிஷா.

Cakeifyயில் வெனிலா, ரெட் வெல்வெட், சாக்லெட் என மூன்று சுவைகளில் தான் பேக்கிங் கிட் உள்ளது. ‘‘நாங்க இந்த கிட்களை அறிமுகம் செய்யும் முன் மக்களின் விருப்பமான சுவையினை குறித்து சர்வே செய்தோம். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அந்த மூன்று சுவையினை விரும்புவதாக தெரிந்து கொண்டோம். தற்போது எலுமிச்சை மற்றும் காபி சுவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். எங்களின் பேக்கிங் கிட் மிகவும் தரமான முறையில் நவி மும்பையில் உள்ள FSSAI அனுமதி பெற்ற தொழிற்சாலையில் தயாரிக்கப்
படுகிறது. இந்தக் கிட் 425 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை ஃபிளேவர்களுக்கு ஏற்ப விற்பனை செய்கிறோம்.

இதுவரை 750 கேக் கிட் விற்பனை செய்திருக்கிறோம். ஆன்லைனில் விற்பனை செய்வதால் இந்தியா முழுதும் எங்களின் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பண்டிகை, பிறந்தநாள், திருமண நாள் என எல்லா விசேஷங்களுக்கும் எங்களின் கேக் கிட் தான் ஹாட் செல்லிங். பலர் பரிசாகவும் கொடுக்கிறார்கள். தற்சமயம் எங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே சந்தைப்படுத்துகிறோம். மேலும் டெலிவரி ஆப் பயன்படுத்துவதால் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடிகிறது. எங்களின் அடுத்த கட்டம் மேலும் புதிய சுவைகளை அறிமுகப்படுத்தி, வர்த்தக ஸ்டோர்களிலும் விற்பனை செய்ய இருக்கிறோம். அடுத்து சர்வதேச அளவிலும் விற்பனை செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார் எலிஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவின்போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வருமானத்திற்கு வழிவகுக்கும் கைத்தொழில்! (மகளிர் பக்கம்)