சுரைக்காய் கோஃப்தா!! (மருத்துவம்)
Read Time:1 Minute, 3 Second
தேவையானவை:
சிறிய சுரைக்காய் – 1,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2, இஞ்சி,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பொடியாக அரிந்த மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
கடலைமாவு – ¼ கப்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையானது.
செய்முறை:
சுரைக்காயைத் தோல் சீவி துருவியில் துருவிக் கொள்ளவும். துருவியதில் உள்ள நீரைப் பிழிந்து விட்டு, ஒரு பாத்திரத்தில் (எண்ணெய் தவிர) அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து காய்ந்ததும் பொரித்து எடுத்து ஆறவிடவும்.