அசத்தும் கொத்தவரை சமையல்!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 34 Second

கொத்தவரை அல்லது சீனி அவரை என்று அழைக்கப்படும் இந்த காய் தாவர இனத்தைச் சேர்ந்தது. கொத்தவரை நம் உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமில்லாமல் மண்ணில் உள்ள நைட்ரஜன் சத்தை அதிகரித்து மண் வளத்தை பெருக்க உதவுகிறது. இது புரதம் நிறைந்துள்ளது. உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. நீரில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் இதை கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

இதிலிருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. கொத்தவரங்காய் விதையினை பொடி செய்து உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். உடல் எடையையும் உடல் கொழுப்பையும் குறைக்கும். இவ்வாறு பல சத்துக்கள் நிறைந்த இந்த கொத்தவரையினை சுவையாக சமைக்க ரெசிபியினை வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி. கொத்தவரைப் பொரியல்தேவையானவை: கொத்தவரங்காய் நறுக்கியது- 1 கப், பாசிப்பருப்பு- 4 ஸ்பூன், தேங்காய் ½ மூடி.தாளிக்க: எண்ணெய்- 2 ஸ்பூன், கடுகு- 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், கடலைப்பருப்பு- 1 ஸ்பூன், மிளகாய் வற்றல்- 1, பெருங்காயம்- 1 சிட்டிகை, மஞ்சள் தூள்- 2 சிட்டிகை, உப்பு- தேவையான அளவு.

செய்முறை: முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நீர் தெளித்து வதக்க வேண்டும். காயும், பருப்பும் உப்பு சேர்த்து, நீர் தெளித்து வெந்ததும் தேங்காய்துருவலைப் போட்டு ஒரு தடவை பிரட்டி எடுக்க வேண்டும். இதுவே கொத்தவரைப் பொரியல்.கொத்தவரங்காய் சாம்பார்தேவையானவை: இரண்டாக கட் செய்த கொத்தவரங்காய்- 1 கைப்பிடி, புளி- நெல்லிக்காய் அளவு, சாம்பார்பொடி – 3 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு, பருப்பு- 1 கைப்பிடி.தாளிக்க: எண்ணெய் – 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 1, கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை.

செய்முறை: முதலில் புளியை திட்டமாக தண்ணீர் ஊற்றிக் கரைத்து, உப்பு, காரம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். துவரம் பருப்பை நன்கு குழைய வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தவரங்காயையும் நன்கு 1 சிட்டிகை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ள வேண்டும். வெந்த கொத்தவரங்காயை கொதிக்கும் குழம்பில் போட்டு மேலும் இரண்டு கொதி விட்டு பச்சை வாசனை போன பின் வெந்த பருப்பைப் போட்டு மேலும் இரண்டு கொதி விட்டு இறக்கி தாளிக்க வேண்டும். இதுவே கொத்தவரங்காய் சாம்பார்.கொத்தவரங்காய் பருப்பு உசிலிதேவையானவை: பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய்- 1 கப், துவரம் பருப்பு- 1 கப், கடலைப்பருப்பு- ¼ கப், பாசிப்பருப்பு – 4 ஸ்பூன், மஞ்சள் தூள்- 1 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு, வற்றல் மிளகாய் – 8.தாளிக்க: எண்ணெய் – 50 மிலி, கடுகு – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – 4 இலைகள், பெருங்காயம் – ½ ஸ்பூன்.

செய்முறை: முதலில் பருப்புகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறியதும், உப்பு, மிளகாய் சேர்த்து கெட்டியாக கொர கொரப்பாக அரைக்க வேண்டும். கொத்தவரங்காயைச் சிறிது உப்பு சேர்த்துத் தனியாக வேகவைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பருப்பு விழுதை ஆவியில் வேக விட வேண்டும். ஆறவைத்துக் கட்டியின்றி உதிர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் தாளித்துக் கொண்டு, வெந்த கொத்தவரங்காயை நீர் பிழிந்துப் போட்டு அதோடு பருப்பையும் சேர்த்துக் கிளறி எண்ணெய் ஊற்றி பிரட்டி எடுத்தால் இதுவே கொத்தவரங்காய் பருப்பு உசிலி. சுவையாக இருக்கும்.கொத்தவரங்காய் வற்றல் குழம்புதேவையானவை: கொத்தவரை வற்றல் – கைப்பிடி அளவு, புளி – எலுமிச்சையளவு, சாம்பார்பொடி – கார தேவைக்கு, உப்பு – தேவையான அளவு.தாளிக்க: தாளிக்கும் எண்ணெய் – 4 ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், வற்றல் மிளகாய் – 2, பெருங்காயம் – ½ ஸ்பூன், கறிவேப்பிலை – 8 இலைகள், துவரம்பருப்பு – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – ½ ஸ்பூன்.

செய்முறை: முதலில் திட்டமாக நீர் ஊற்றிப் புளியை சுமாராக கெட்டியாக கரைத்துக் கொண்டு உப்பு, சாம்பார்பொடி சேர்த்து, அடுப்பிலேற்றவும். பக்கத்திலேயே வாணலியைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றித் தாளித்து, கொத்தவரை வற்றல் தவிர மீதியைத் தாளித்துப் போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கும்போதே 4 ஸ்பூன் எண்ணெயில் வற்றலை வறுத்துப் போட்டுக் கிளறவும். குழம்பு நெடிவாசனை போக கொதித்து கெட்டியானதும் இறக்கவும். சிலர் தேங்காயை வறுத்தோ, பச்சையாகவோ அரைத்துச் சேர்ப்பார்கள். அது அவரவர் சுவையின் விருப்பம்.கொத்தவரங்காய் புளிக்கூட்டுதேவையானவை: கொத்தவரங்காய் பொடியாக அரிந்தது – 1 கப், கடலைப்பருப்பு – 3 ஸ்பூன், சாம்பார்பொடி – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு.வறுத்து அரைக்க: தனியா – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – ½ ஸ்பூன், மிளகாய் வற்றல் – 1, மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா 1 சிட்டிகை, தேங்காய் – 4 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, பச்சரிசி – ½ ஸ்பூன்.தாளிக்க: கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்.

செய்முறை: முதலில் ஒரு வாணலியில் திட்டமாக எண்ணெய் ஊற்றி தனியா, கடலைப்பருப்பு, மிளகாயை வறுக்க வேண்டிய சாமான்களை வறுத்து எடுத்துக் கொண்டு, அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பைச் சிவக்க வறுத்து எடுத்துக் கொண்டு, பின் கொத்தவரங்காய் மற்றும் சாம்பார் ெபாடி சிறிது வதக்கிக் கொண்டு அதன் பின் நீரூற்றி கடலைப்பருப்பு, உப்பு, சாம்பார்பொடி சேர்த்து நன்கு வேகவிட்டு புளியை கெட்டியாக கரைத்துவிட்டு அரைக்கக் கொடுத்துள்ளவற்றையும் அரைத்து சேர்த்து, நன்கு கொதித்ததும் தாளிக்கவும். இதுவே கொத்தவரங்காய் புளிக் கூட்டு.

கொத்தவரங்காய் கிள்ளுக் கறிதேவையானவை: கொத்தவரங்காயை இரண்டிரண்டாகக் கிள்ளியது – 1 கப், மிளகாய் வற்றல் – 2, உப்பு – தேவையான அளவு.தாளிக்க: கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், எண்ணெய் – தேவைக்கு, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து கொண்டு, கொத்தவரங்காயையும் சேர்த்து வதக்கிய பிறகு, நீர் சேர்த்து, உப்பும் போட்டு நன்கு வேகவிட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்து வேகவிட்டுக் குழையாமல் பொரியல் செய்து எடுக்கவும். இதற்கு தேங்காய் வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை தேவையில்லை.கொத்தவரை ஜூஸ்தேவையானவை: கொத்தவரங்காய் – 1 கைப்பிடி, எலுமிச்சை – 1 மூடி, உப்பு – 2 சிட்டிகை.

செய்முறை: கொத்தவரங்காயை அலம்பி சிறு துண்டுகளாக்கி, எலுமிச்சை மூடியை நறுக்கி உப்பு சேர்த்து அப்படியே சிறிது நீர் சேர்த்து கூழாக அரைத்து, மீண்டும் சிறிது நீர் சேர்த்துக் கலக்கி வடிகட்டி, ஜூஸாகக் குடிக்கவும். இது நரம்பு மண்டலத்துக்கு எனர்ஜியை அளிக்கும். நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் குடித்து வரலாம். சுவைக்கேற்ப இஞ்சி தேவை எனில் சேர்க்கலாம்.கொத்தவரங்காய் பொரிச்ச கூட்டுதேவையானவை: கொத்தவரங்காய் பொடியாக அரிந்தது – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகாய் வற்றல் – 1, தேங்காய் துருவல் – ¼ மூடி, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.தாளிக்க: எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு- 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, கறிவேப்பிலை – 4 இலைகள்.

செய்முறை: முதலில் வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கொத்தவரங்காயைப் போட்டு பிரட்டி எடுத்து அதன் பிறகு உப்பு, மஞ்சள் தூள், பாசிப் பருப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் வறுத்த பொருட்களுடன் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து விட்டுக் கொதிக்க விட்டு இறக்கவும். கூட்டு நீர்த்து இருந்தால் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சிறிது நீர் விட்டுக் கரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். பின் தாளித்துப் போடவும். இதுவே கொத்தவரை பொரிச்ச கூட்டு.

கொத்தவரங்காய் வற்றல் வறுவல்தேவையானவை: கொத்தவரங்காய் – 1 கிலோ, உப்பு – 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப, எண்ணெய் வறுத்தெடுக்க – தேவையான அளவு.

செய்முறை: கொத்தவரங்காயை நன்கு கழுவ வேண்டும் அதன் நுனியினை வெட்ட தேவையில்லை. பின்பு பெரிய பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து ஒரு ெகாதி விடவும். அவிக்க தேவையில்லை. ஒரு கொதி வந்ததும், தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே சூட்டில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின் நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும். தினமும் அதை பிரட்டி விட்டு நன்கு காயவைக்க வேண்டும். வற்றல் நன்கு காய்ந்ததும், காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். தேவைப்படும் போது வாணலியில் எண்ணைச் சேர்த்து காய்ந்ததும், வற்றலைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இது சாம்பார் சாதம் முதல் மோர் சாதம் வரை தொட்டுக் கொள்ள ஏற்றது.

கொத்தவரங்காய் குழம்புதேவையானவை: சாம்பார் பொடி- 2 ஸ்பூன், கொத்தவரங்காய்- 1 கப், புளி- எலுமிச்சையளவு, தக்காளி – 2, சின்ன வெங்காயம் – 10, உப்பு – தேவையான அளவு.பொடி செய்ய: மிளகாய் வற்றல் – 4, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், தனியா – 2 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன்.தாளிக்க: கடுகு- 1 ஸ்பூன், கறிவேப்பிலை- 4 இலைகள், எண்ணை – 4 ஸ்பூன்.

செய்முறை: முதலில் வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி வறுக்க வேண்டியவைகளை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு சிறிது எண்ணை ேசர்த்து கொத்தவரங்காயை நன்கு வதக்கி நீர்விட்டு வேக விட வேண்டும். வெந்ததும் அதிலேயே புளிக்கரைசல், உப்பு, சாம்பார்பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாதி கொதிக்கும்போது, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வதக்கி சேர்க்க வேண்டும். ஒரு கொதி விட்டு பொடித்தவற்றைப் போட்டு மேலும் ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். பிறகு தாளிக்க வேண்டியவற்றை தாளித்துப் போட்டால் மணமும், ருசியும் பிரமாதமாயிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களுக்கு எங்கெல்லாம் தொட்டால் காம உணர்ச்சி அதிகமாகும்?…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வாசகர் பகுதிகேஸ் அடுப்பை பராமரிப்பது எப்படி? (மகளிர் பக்கம்)