வறட்டு இருமலை போக்கும் வாழைத்தண்டு!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 14 Second

முக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்துபாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். *வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை நீக்கும் வல்லமை கொண்டது.*சிறுநீர் பிரச்னையுள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச்சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வை நீக்கும்.*வாழைத்தண்டு சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும்.*வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நாரினை நீக்கி சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி மற்றும் தாகம் தணியும்.*வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.*வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும். கோழைக்கட்டு ஆகியவை இளகும்.*நல்ல பாம்பு கடிக்கு வாழைத்தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.*வாழைத்தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.*வாழைப்பூ சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கை, கால் எரிச்சல், வெள்ளைப்படுதல், மாதவிலக்கின்போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூ சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.தொகுப்பு : ஆர்.கீதா ரவி, சென்னை.முட்டை கோஸின் மருத்துவ குணம்*முட்டைக்கோஸில் பத்துக்கும் மேற்பட்ட தாது உப்புகளும், ஐந்து வைட்டமின்களும் உள்ளன.*ஐம்பது கிராம் முட்டைக்கோஸ் சாற்றை தக்காளி சாறுடன் தினமும் காலையில் அருந்தி வர கண் பார்வை தெளிவு பெறும். வயிற்றுப்புண் குணமாகும்.*மதிய உணவில் முட்டைக்கோஸ் பச்சடி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.*இதில் உள்ள ‘நியாசின்’ மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், இதயத் தசைகள் சீராக இயங்க செய்யும். ‘தயமின்’ வைட்டமினும் ‘பிட்டீஸ்’ என்ற ரசாயனப்பொருள் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

*சிறுநீரகத்தில் கற்கள், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்த சோகை, மாவு சத்துக்கள் உடலில் அதிகம் தங்கி நீரிழிவு நோய் முதலியவற்றைத் தடுக்கிறது. முட்டைக்கோஸிலுள்ள ‘டார் டாரிக்’ அமிலம் சர்க்கரையோடும், கார்போஹைட்ரேட்டோடும் கொழுப்பாக மாறி உடலில் சேராமல் தடுத்து விடுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுயஇன்பம் காணும்போது செய்யும் தவறுகளில் சில..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மாதவிடாய் சீராக ஈஸி வைத்தியம்! (மருத்துவம்)