நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்துவது எப்படி? (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 14 Second

*நான்ஸ்டிக் தவாவை உபயோகிக்கும் முன் கண்டிப்பாக பாத்திரத்தை கழுவ வேண்டும்.

*கழுவுவதற்கு சோப்புத்தூளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.

*நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும்போது அதிகமான சூட்டில் வைக்காமல், குறைந்த மிதமான சூட்டில் வைத்துப் பராமரித்தாலே போதுமானது.

*சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி நான்ஸ்டிக் தவாவை தீயின் மேல் வைக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைக்க நேர்ந்தால் அதன் மேல் பூசப்பட்ட கோட்டிங் பாழாகிவிடும்.

*தவாவை கழுவி, துடைக்கும் போது, மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைத்தல் வேண்டும். கூர்மையான கரண்டி மற்றும் கத்தியை பயன்படுத்தக் கூடாது.

*மரத்திலான கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டியை பயன்படுத்துதல் வேண்டும்.

*மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல் அதற்கென்று உள்ள ஆணியிலோ அல்லது தகுந்த இடங்களிலோ மாட்டி வைத்து எடுத்து பயன்படுத்த வேண்டும்.

  • கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

புதினாவின் பெருமைகள்

புதினா கீரையை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறோம். அதற்கு வேறு சில தன்மைகளும் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.

*இஞ்சி, மிளகுடன் புதினாவை வறுத்து நீர் சேர்த்து சுண்டக்காய்ச்சி தேவைக்கேற்ப பனைவெல்லம் கலந்து சாப்பிட வயிற்றுக் குமட்டல் தீரும்.

*புதினாவை உலர்த்திப் பொடித்து உப்பு கலந்து பல் வலியுள்ள இடத்தில் தேய்த்தால் வலி குறையும்.

*புதினாவுடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். துவையல் செய்யும் போது இஞ்சி சேர்த்து அரைக்கலாம்.

*கீரையை வேகவைத்து, நீரை வடிகட்டி எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் பித்தம் தீரும்.

*நீர் விட்டு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் குரல் வளம் பெறும்.

*தேன், எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலை விழுதை கலந்து சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். சிறுநீர் எரிச்சல் தீரும்.

*புதினா, சிறிது இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பிரண்டை துளிர், புளி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, வறுத்த உளுத்தம் பருப்பு, உப்பு சேர்த்து துவையலாகச் சாப்பிட்டுவர அஜீரணக் கோளாறு தீரும்.

*புதினாவையும், கறிவேப்பிலையையும் நல்லெண்ணெயில் வதக்கி, புளி, வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

*புதினாவை கசக்கி ஓட்ஸுடன் கலந்து முகப்பரு மீது வைத்து ½ மணி நேரம் கழித்து வெது வெதுப்பான வெந்நீரினால் கழுவி வந்தால் பருக்கள் மறையும்.

*துவையல், வெஜிடபிள் பிரியாணி மட்டுமில்லாமல் ரசம் செய்தால், சுவையாக இருக்கும். பல மருத்துவ குணங்கள் கொண்ட புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து பலன்கள் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வேலைவாய்ப்பினை அள்ளி வழங்கும் ஐ.டி! (மகளிர் பக்கம்)
Next post விஷுவல் பர்சனாகவே என்னை யோசிப்பேன்!! (மகளிர் பக்கம்)