சினிமா முதல் காதுகுத்து வரை… வந்தாச்சு கஸ்டமைஸ்ட் உடைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 44 Second

சினிமா துறையில் மட்டுமல்லாது கல்யாணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, காதுகுத்து என அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது உடை அலங்காரம். சினிமாத்துறையில் மட்டும்தான் நடிகர், நடிகைகளுக்கான பிரத்யேகமான உடை அலங்கார நிபுணர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது சாதாரண மக்களும் அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்ப உடை அலங்கார நிபுணர்களை நாடுகிறார்கள். அவர்களுக்கென அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப இவர்கள் உடைகளை வடிவமைத்து தருகிறார்கள். சொல்லப்போனால் உடை அலங்கார துறையில் வளர்ச்சி நாளுக்கு நாள் அசுரவேகத்தில் மளமளவென வளர்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்த துறையில் வளர்ந்து வரும்”Foxy Wardrobe’’ என்கின்ற காஸ்ட்யூம் டிசைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அர்ச்சனா ரகுநாதனை சந்தித்து இந்த துறையை பற்றி மேலும்  கேட்டறிந்தோம். கல்யாணம் போன்ற எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் உடை அலங்கார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்?

இன்றைய காலக்கட்டத்தில் கல்யாணம் போன்ற நிகழ்ச்சியினை மிகவும் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். சொல்லப்போனால் சினிமாவை போலவே, பெரியபெரிய கேமராக்கள் மற்றும் ட்ரோன் கொண்டு அந்த நிகழ்வினை ஷூட் செய்கிறார்கள். ஒரு பக்கம் கேமராக்கள் ஷுட் செய்ய மறுபக்கம் அதனை அப்படியே எடிட் செய்து, ஒரு திரையில் அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்கிறார்கள். திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. அன்று மணமகள் தான் ஹீரோயின். அதனால் அதில் அவர்கள் அழகாகவும் பிரமாண்டமாகவும் தெரியவே விரும்புகிறார்கள். மேலும் கல்யாண ஜோடிகள் மற்றவர்கள் கண்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகவே மேக்கப் முதல் அவர்களின் ஆடைகள் வரை அனைத்திலும் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு ஏற்ப நாங்களும் ஆடைகளை வடிவமைத்து தருகிறோம். இதில் மணமகளின் ஆடைக்கு ஏற்றால் போல் மேட்சிங்காக மணமகனின் ஆடையையும் தயாரித்து தருகிறோம். இன்றைய தலைமுறையினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகளின் ஆடையின் நிறம் மற்றும் டிசைன்களுக்கு ஏற்ப மணமகனின் உடை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே போல், கச்சிதமாக வடிவமைத்துக் கொடுப்போம். ரெடிமேட் உடைகளில் இது சாத்தியப்படாது. சிலருக்கு உடனடியாக தேவைப்படும் போது, எங்களிடம் ஏற்கனவே தைத்து வைத்திருக்கும் உடைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து அதனை வாடகைக்கு கொடுக்கிறோம். இதனால் எந்த ஒரு விழா என்றாலும் எங்களின் கைவண்ணம் அதில் இல்லாமல் இருக்காது. இன்றைய டிரண்டிங் டிசைன்கள்? இப்போது ரொம்ப ட்ரெண்டிங்ல இருக்குறது, ஆரி வேலைப்பாடும் மற்றும் கான்டெம்பிரரி லெஹங்கா. சங்கீத் நிகழ்ச்சி முதல் நிச்சயதார்த்தம், கல்யாணம் வரை ஆரி வேலைப்பாடு கொண்ட உடைகளை தான் பலர் விரும்புகிறார்கள். இந்த வேலைப்பாட்டை பொறுத்தவரை சிம்பிள் மற்றும் கிராண்டாகவும் வடிவமைக்கலாம். அதனால்தான் பலரும் இந்த வேலைப்பாட்டினை விரும்புகிறார்கள். மேலும் பிளவுசில் ஒரு டிசைனை வடிவமைக்கும் போது அது எம்போஸாகி தெரியும். இது கொஞ்சம் ஹைலெவல் பட்ஜெட்தான். சிம்பிள் ஆரி வேலைப்பாடுகளின் ஆரம்ப விலையே ரூபாய் ஐயாயிரம் வந்திடும். ஆனால் இந்த வேலைப்பாடு காலத்திற்கும் அழியாமல் நல்ல ஒரு பசுமையான நினைவுகளாக இருக்கும். இதில் இருக்கும் சவால்கள்?கஷ்டப்பட்டு நான் ஒரு டிசைன் செஞ்சி, அதை மார்கெட்டிங் செய்றதுக்காக ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டானு சோஸியல் மீடியாவுல போஸ்ட் போட்டா.. அதே போல  டிசைன் சோஸியல் மீடியாவில் வலம் வருகிறது. நான் அந்த டிசைனுக்காக ஒரு குறிப்பிட்ட விலையினை நிர்ணயித்து இருப்பேன். அதைவிட குறைவாக அவர்கள் கோட் செய்திருப்பார்கள். அதை பார்த்தா மன உளைச்சலா இருக்கும். அதனால என்னுடைய பிராடக்டை யாரும் காப்பி அடிக்காமல், அதை காப்பாற்றுவதே எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது. சினிமா, சீரியல், கல்யாணம் இப்படி ஒவ்வொன்றுக்கும் உடை அலங்காரம் வேறுபடுமா?நிச்சயமாக!. சினிமாவுக்கு, டைரக்டர் சொல்லும் சீனுக்கு ஏற்றாற்போல், இல்லைனா டைரக்டர் மைண்ட்ல இருக்குற உடைகளை டிசைன் செய்து கொடுப்போம். இப்ப வர சீரியல் எல்லாத்துலையுமே, ரெண்டு விதமான உடைகளை பயன்படுத்துறாங்க. ஒன்று கிராண்ட் புடவைகள் அல்லது பாவாடை தாவணி. மற்றொன்று அழகான சிம்பிளான சுடிதார் உடைகள். வெஸ்டர்ன் டைப் உடைகளை அதிகம் யாரும் இதற்கு தேர்வு செய்வதில்லை. கல்யாணத்திற்கு டிசைன் செய்யும் உடைகள் அப்படியே வேறு மாதிரியாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது போல், ஜோடிகளுக்கு மேட்சிங் உடைகள், மணமகள் விரும்பும் உடைகளை ஸ்பெஷலாக வடிவமைத்து தருவோம், அதேபோல் கல்யாணத்திற்கு புடவைக்கு ஏற்ப பிளவுஸ்களையும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டிசைன் செய்து தருவோம். இப்படி அவர்களின் ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் உடைகள் மாறுபடும். எல்லாவற்றையும் விட கல்யாண உடைகளை கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். டி.வி பிரபலங்களின் உடை அலங்காரம்?சோசியல் மீடியாவுல நான் கொஞ்சம் ஆக்ட்டிவா இருப்பேன். நடிகை அபர்ணதிக்குதான் நாங்க முதன்முதலில் டிசைன் செய்து கொடுத்தேன். அதை, என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்தேன். அதை பார்த்து, சன் டிவி “திருமகள்’’ சீரியல்ல நடிச்ச கிரேஸ் தங்கவேல். “பாரதி கண்ணம்மா’’ சீரியல்ல நடிச்ச அருள் ஜோதி, “பாண்டியன் ஸ்டோர்ல’’ நடிச்ச காவ்யா அறிவுமணி, அன்புடன் குஷி நீத்து, சூப்பர் சிங்கர் விருஷா, “மசாலா காபி’’ பேண்ட் அஸ்லாம் அப்துல்மாஜீத்,  நடிகைகள் யாஷிகா ஆனந்த், பவித்ரா லக்ஷ்மினு நிறைய பேருக்கு தற்போது உடைகளை வடிவமைத்து தருகிறேன். என்னுடைய உடைகளை பலர் விரும்புறாங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஃபேஷன் டிசைனர்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளதா? எஸ்.. எனக்கும் அந்த டவுட் இருக்கு. சென்னை, பெங்களூர் போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில் காஸ்ட்யூம் டிசைனர்ஸ் பற்றி ஒரு அவார்னெஸ் இருக்கு. மற்ற ஊர்ல போதிய விழிப்புணர்வு இல்லைனுதான் சொல்லணும். இப்போது குஜராத், சூரத் போன்ற நகரத்தில் இருந்து நம்ம சென்னை சௌகார்பேட்டைக்கு அப்படியே துணிகள் இறக்குமதியாகிறது. அவர்கள் அதை அப்படியே தைத்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். மேலும் காஸ்ட்யூம் டிசைனர்களின் உடைகள் என்றால் அதிகம் விலை இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்துள்ளது. இதனால், எங்களைப் போன்ற டிசைனர்களுக்கு சாதாரண மக்கள் மத்தியில் பெரிய அடையாளம் கிடைப்பதில்லை. சமீபத்தில் நீங்கள் டிசைன் செய்த உடை? என் உறவினரின் திருமணத்திற்கு சங்கீத், ரிசப்ஷன் முதல் திருமணம் என அனைத்து உடைகளும் அவளுக்கு நான் தான் வடிவமைச்சேன். அவளுக்காக ஒவ்வொரு உடையும் பார்த்து பார்த்து டிசைன் செய்தது என்னால் மறக்கவே முடியாது. அவளுக்கு மட்டுமில்லாமல் எங்க வீட்டு ஆண்கள் எல்லாரும் ஒரே மாதிரியான உடையினை அணிய விருப்பப்பட்டாங்க. அவங்களுக்காக ஒரு அழகான குர்தாவ டிசைன் பண்ணினேன். இது என் மனசுக்கு மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம். உடை அலங்கார தொழிலைப் பொறுத்தவரை எப்போதுமே சக்சஸ் என்று சொல்லிட முடியாது. சில சமயம் துக்கமான சம்பவமும் நடக்கும். நான் பிஸ்னஸ் ஆரம்பிச்ச காலம். ஒரு ட்ரசுக்கு எவ்வளவு பேமென்ட் வாங்கணும்னு தெரியாது. ரொம்ப குறைந்த அளவில் தான் அந்த உடைக்கான கூலி வாங்குனேன். அதாவது நான் வாங்கும் கூலியை விட அதற்கான தைக்க செலவான கூலி அதிகமாக இருக்கும். நான் தைத்த உடைக்கு வாடிக்கையாளர்களிடம் ரூ.5000 வாங்கி இருப்பேன். ஆனால் அதற்கு நான் செலவு செய்த தொகை அதை விட அதிகமாக இருக்கும். குறைந்த தொகை என்றாலும் அது எனக்கு நஷ்டம் தானே. இப்படி ஆரம்பக் கட்டத்தில் நிறைய நஷ்டமாகி இருக்கேன். எதிர்காலம்?இப்போ இருக்குற ஜெனரேஷன் எல்லாருமே நார்மல் ட்ரெஸ் போடுறது இல்லை. ஆரி வேலைப்பாட்டில் ஒரு மெல்லிய கோடாவது டிசைன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு காதுகுத்து நிகழ்ச்சிக்கு கூட, எங்களை நாடுகிறார்கள். காரணம் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், அவர்களின் உடை பிரமாண்டமாக இருக்கவே விரும்புகிறார்கள். நாங்க மெஷின் கொண்டு டிசைன் செய்ய மாட்டோம். கைகளால் செய்வதால் நேர்த்தியாக இருக்கும். அதைத்தான் மக்களும் விரும்புறாங்க. அதேபோல் முன்பெல்லாம் சினிமா துறையில் சிகை அலங்காரம், மேக்கப், புடவை வடிவமைப்பு எல்லாமே மேக்கப் ஆர்டிஸ்ட் பார்த்துக் கொள்வார்கள். இப்போது எல்லாவற்றுக்கும் தனித்தனி ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க. அவர்கள் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்துவதால், அதில் தங்களின் திறனை மென்மேலும் மெருகேற்றிக் கொள்கிறார்கள். இப்படி வேலைகளை பிரித்து செய்வதால், சுமைகளும் குறையும். நாங்களும் உடை அலங்காரத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதால், வரும் காலத்தில் நிறைய பிளான் வச்சிருக்கோம். அதில் முதலில் எங்களின் டிசைன் ‘Flag Ship’ டிசைன் என்று பெயர் பெறவேண்டும். அடுத்து ஒரு சிறப்பான உடையினை வடிவமைத்து சிறந்த உடைன்னு விருது வாங்கணும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிந்தடிக் ஷிபான் டிசைனர் புடவைகள் என்னுடைய சாய்ஸ் கிடையாது! (மகளிர் பக்கம்)
Next post முதல் முறை உடலுறவின் போது பெண்களுக்கு இப்படி ஆக காரணம் என்ன தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)