கருப்பை புற்றுநோய் தடுப்போம்… தவிர்ப்போம்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 17 Second

சர்வதேச அளவில் ஏற்படும் புற்றுநோய்களில் நான்காவது இடத்திலும், மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்ததாக பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகவும் கருப்பை புற்றுநோய் இருக்கிறது.ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரம் சொல்லி எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
கருப்பையின் கீழ்ப்பகுதியை தாக்கும் இந்த புற்றுநோய், 15 முதல் 44 வயதுக்குட்பட்ட, இனப்பெருக்கத் தகுதியுள்ள பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இது பெரும்பாலும் Human பபில்லோமாவுஸ் (HPV) காரணமாக ஏற்படுகிறது. வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளாலும் இந்தப் புற்றுநோய் வருகிறது.

கருப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும். மேலும், ஆரம்ப கட்டத்திலேயே கண்டுகொண்டால் குணமாக்கவும் முடியும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பால் குழந்தையின்மை, கர்ப்பகால சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அங்கிருந்து பெண்ணுறுப்பு, நிணநீர்க் கணுக்கள் மற்றும் இடுப்பறையை சுற்றியுள்ள உறுப்புகளுக்கும் பரவும் அபாயமுண்டு.’

அறிகுறிகள்

கருப்பை வாய் புற்றுநோய் என்பது இயல்புக்கு மாறான உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற தொடர் வளர்ச்சியினால் ஏற்படுகிறது. இயல்புக்கு மாறான யோனிமடல் கழிவு, எதிர்பாராத ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்துக்கு பின்பும் ரத்தக்கசிவு, உடலுறவின்போது வலி போன்றவைகள் பொதுவான அறிகுறிகள். பல்வேறு ஆண்களுடன் உறவுகொள்வது, புகைபிடிப்பது, கருத்தடை மாத்திரைகளின் நீண்டகால பயன்பாடு போன்றவைகளினால் ஏற்படும் நோய் தொற்றும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பரிந்துரைக்கப்படும் சோதனைகள் என்ன?

பெண்கள் தங்களின் 21-வது வயது முதலே கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 21 முதல் 29 வயது வரையுள்ள பெண்கள் அனைவரும் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை POP test எனப்படும் கருப்பை முக பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். சோதனை முடிவுகள் இயல்புக்கு மாறாக இருந்தால், அடுத்தகட்டமாக HPV தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் 30 முதல் 65 வயதுவரையுள்ள பெண்கள் 5 ஆண்டுகளுக்கொருமுறை பாப் டெஸ்ட் மற்றும் HPV தொற்று சோதனை இரண்டையும் செய்துகொள்ள வேண்டும்.

பரிசோதனை முறைகள்

கருப்பை வாய்புற்றுநோய் பல்வேறு முறைகளில் பரிசோதனை செய்யப்படலாம். வழக்கமான பாப் சோதனை புற்றுநோயாக மாறும் முன்பே உயிரணுக்களில் ஏற்படும் மாற்றங்களை முதலிலேயே கண்டறிய முடியும். இதனால் முன்னதாகவே சிகிச்சையளிக்க முடியும்.திரவத்தை அடிப்படையாகக் கொண்ட செல்லியல் பாப் சோதனை வழக்கமான பாப் சோதனையிலிருந்து மாறுபட்ட ஒரு மேம்பட்ட நுட்பத்தின் மூலம் கருப்பை வாய்புற்றுநோய் பரிசோதனைக்கான ஆய்வக மாதிரிகளை தயாரிக்கும் முறை.

HPV DNA சோதனை

HPV (மனித பப்பிலோமா வைரஸ்) சோதனை மூலம் புற்றுநோயையும் உயிரணு மாற்றத்தையும் ஏற்படுத்தும் தொற்றுக்களை கண்டறிய முடியும். HPV தொற்றுக்கள் பொதுவானவை என்பதால் பெரும்பாலும் அவை தானாகவே மறைந்துவிடும். பிரச்னைகளையும் ஏற்படுத்துவதில்லை. இயல்புக்கு மாறான பாப் சோதனை முடிவுள்ள பெண்களுக்கான சிகிச்சை முறையை முடிவு செய்ய HPV தொற்று சோதனையுடன், பாப் சோதனையும் செய்வது நல்லது.

ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை மற்றும் கருப்பை வாயை மட்டும் அகற்றல்) மூலம் சரி செய்யலாம் அல்லது முழுமையான கருப்பை நீக்க அறுவை சிகிச்சை (கருப்பை, கருப்பை வாய், பிறப்புறுப்பின் பகுதி மற்றும் நிணநீர் முனைகள் ஆகியவற்றை அகற்றல்) மூலமும் கட்டுப்படுத்தலாம்.
அறுவைசிகிச்சைக்குப்பின் மீதமுள்ள புற்றுநோய் செல்களை கீமோதெரபியுடன் இணைந்த கதிர்வீச்சு சிகிச்சையும் பயன்படுத்தப்படுகிறது.

கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிகள் என்ன?

20 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, தாம்பத்ய உறவில் ஈடுபடுபவராக இருந்தால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உங்களது கடைசி பரிசோதனையில் இயல்புக்கு மாறான முடிவுகள் வந்திருக்கும் பட்சத்தில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இப்போது கருப்பை வாய்புற்றுநோய் வராமல் தடுக்க தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகிறது. 9 வயது முதல் 45 வயது வரையுள்ள எந்த பெண்ணும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஆரம்ப காலத்தில் போடப்படும் தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். ஆகவே, மருத்துவரை கலந்தாலோசித்து, தடுப்பூசியும் போட்டுக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூல நோய்க்கான வெளிப்புற சிகிச்சை முறைகள்! (மருத்துவம்)
Next post காதலில் காமத்தை கலக்காதீர்கள்! ஆர்வம் போய்விடும்..!! (அவ்வப்போது கிளாமர்)