முதல் முறை உடலுறவின் போது பெண்களுக்கு இப்படி ஆக காரணம் என்ன தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 25 Second

பலரும் இதனை பற்றி வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்களது முதல் உடலுறவு அனுபவமானது மிக சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இது எல்லோருக்கும் மிகச் சிறந்த அனுபவமாக அமைந்து விடாது. இதில் சிலருக்கு சில தடுமாற்றங்கள் உண்டாகும். இது இயல்பானது தான்.

முதல் முறை உடலுறவு கொள்வது என்பது உண்மையில் பெண்களுக்கு அசௌகரியமானதாகவும், சில சமயங்களில் அதிக வலியை உண்டாக்குவதாகவும் இருக்கும். இது நிச்சயமாக பலருக்கு சாதாரணமானதாக இருக்காது. சில பெண்களுக்கு உடலுறவின் போது இரத்த போக்கு உண்டாகும். ஆனால் இது அனைவருக்கும் ஏற்படாது. இது சிலருக்கு மிகுந்த வலியை கொடுக்க கூடியதாகவும், அசௌகரியத்தை தர கூடியதாகவும் இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு உடலுறவு பற்றி போதிய அறிவு இருக்காது. சரி, இந்த பகுதியில் ஏன் பெண்களுக்கு முதல் முறை உடலுறவு கொள்ளும் போது வலி உண்டாகிறது என்பது பற்றி காணலாம்.

1. வலி பயம் : வலியை விட வலிக்குமோ என்ற பயம் தான் முதலில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அதிக வலியை உண்டாக்குகிறது. முதல் முறை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது வலி உண்டாகமல் இருக்க, ஆண்கள் தங்களது துணைக்கு உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உடலுறவுக்கு முன்னான காதல் பேச்சுக்கள் மற்றும் காதல் விளையாட்டுக்கள் போன்றவை பெண்களுக்கு உடலுறவு மீது இருக்கும் அதீத பயத்தை குறைக்க உதவுகின்றன.

2. இரத்த பயம் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இரத்த போக்கு ஏற்பட வேண்டும் என்பது கட்டாயம் என்பது பெண்களின் எண்ணமாக உள்ளது. இது மிகவும் தவறான ஒன்றாகும். முதல் முறை உடலுவின் போது இரத்த போக்கு உண்டானால் தான் கர்ப்பு இருக்கிறது என்ற மூட்டாள் தனமான அர்த்தம் பலரிடம் நிலவி வருகிறது. இது மிகவும் முக்கியமானது அல்ல. பெண்ணுறுப்பில் இருக்கும் மிகவும் லேசான மேம்பரேன் என்பது உடலியல் செயல்பாடுகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல், சுய இன்பம் காணுதல் போன்றவற்றின் போது உடைந்து இருக்க கூடும். எனவே இது பெண்களுக்கு முக்கியமானது அல்லது. இதனால் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது, பெண்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்படாமல் இருப்பது நல்லது.

3. ஈரப்பதம் வலி இல்லாத, நீண்ட நேர உடலுறவுக்கு பெண் உறுப்பில் ஈரப்பதம் உண்டாக வேண்டியது மிகவும் அவசியமாகும். உடலுறவுக்கு முன் விளையாட்டுக்கள் இந்த ஈரப்பதத்தை அதிகரிக்கும் என்பதால் நீங்கள் உங்களுடைய துணையுடன் இதனை செய்யலாம். ஈரப்பதம் இல்லாத நிலையில் உடலுறவு கொண்டால், வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், எரிச்சல், இரத்த போக்கு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

4. வேகம் உடலுறவில் வேகம் காட்டுவது என்பது வலியை உண்டாக்கும் என்பதால், மிகவும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்பட வேண்டியது அவசியம். இல்லை என்றால் வலி உண்டாகும். இது பயத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கும் இது காரணமாக இருக்கும்.

5. அமைதியின்மை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அமைதியான மன நிலை என்பது மிகவும் அவசியம். பயம், மனக் குழப்பம், வெறுப்பு போன்றவை பெண் உறுப்பில் ஈரப்பதம் உண்டாவதை தடுக்கும் காரணங்களாக அமைந்து விடும். இதனால் உடலுறவு என்பது மிகவும் கடினமாக ஒன்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு இந்த சூழ்நிலையில் வலி ஏற்படவும் செய்யும். எனவே மனதை அமைதியாகவும், உங்களது துணையுடன் ஒருங்கிணைத்தும் வைத்துக் கொள்வது என்பது முக்கியம்.

6. குறிப்பு இந்த முறைகளை எல்லாம் கடைப்பிடித்தும் உங்களுக்கு உடலுறவு கொள்ளும் போது வலி ஏற்பட்டால் அருகில் உள்ள பெண்கள் நல மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புர்கா!! (மகளிர் பக்கம்)
Next post உடலுறவில் முழு சுகம் கிடைக்காமல் போக இது தான் காரணம்னு தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)