கோடைக்கு இதமான தர்பூசணி! (மருத்துவம்)

Read Time:3 Minute, 47 Second

வெயில் காலம் துவங்கிவிட்டது. சாலை எங்கும் தாகத்தையும் வெயிலின் சூட்டையும் தணிக்க தர்பூசணி பழங்களை விற்பனையில் பார்க்கலாம். கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த
பழத்தில் பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி நிறைய உள்ளது.

*தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் உடல் சூடு தணியும்.

*தர்பூசணி சாறுடன் சீரகப் பொடி சேர்த்து குடித்தால் நீர்க் கடுப்பு குறையும்.

*தர்பூசணி சாறுடன் பால் கலந்து குடித்தால் தொண்டை வலி போகும்.

*ஆஸ்துமா பிரச்னையை குறைக்கும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது.

*தோலை பளபளப்பாக்கி சுருக்கங்களை நீக்கி மேனி அழகுற செய்யும்.

*தர்பூசணி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவினால் கண் குளிர்ச்சியாகும்.

*தர்பூசணியுடன் பதநீர் சேர்த்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்.

*தர்பூசணியில் நீர் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள சூட்டை தணிக்கிறது. கோடைக்கு இதமாக உள்ளது.

*கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. கரைக்கிறது.

*தர்பூசணியை கோடை காலத்தில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*தர்பூசணி சாப்பிட்ட பின்னர் அதன் தோலை நம் முகத்தில் கைகளில் தடவினால் அழுக்குகள் அகன்று தோலை மென்மையாக்கும்.

*தர்பூசணி விதைகளில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்தத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது.

*தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இதயத் துடிப்பை சீராக்கும்.

சிறுநீர்க் கற்களிலிருந்து இதன் விதைகள் நம்மை காக்கும். ஒரு டேபிள் ஸ்பூன் விதைகளை அரைத்து அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்ற வேண்டும். சூடு ஆறியதும் இதைக் குடிக்கலாம்.

*கோடையில் உடல் எனர்ஜி குறையாமல் இருக்க தினமும் ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு குடிக்கலாம்.

*தர்பூசணியில் உள்ள பீட்டா கரோட்டின் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து நம்மை காக்கிறது.

*அதிக எடை, உடல் பருமன் பிரச்னை கொண்டவர்களுக்கு குறைந்த கலோரி தர்பூசணி விதைகள் மிகவும் நன்மை பயக்கும்.

*காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் தர்பூசணி விதை வித்தியாசமே தெரியாது. சிற்றுண்டிகளில் சேர்த்து சமைக்கலாம்.

*தர்பூசணி பழம், விதை, தோல் என எல்லாமே ஆரோக்கியம் தரவல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தி கேரளா ஸ்டோரி!! (மகளிர் பக்கம்)
Next post காதை கவனியுங்கள்!! (மருத்துவம்)