ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 35 Second

நான் செய்த கூட்டாஞ்சோறு
வேண்டுமானால் உனக்கு
காரமாய் இருக்கலாம்!
நீயே விரும்பிய
நானெப்படி உனக்கு
கசந்து போவேன்? – வா.மு.கோமு

என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்… ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்… ஆனால், தாமதமாக நடந்த திருமணம்! அவருக்கும் மனைவி செல்விக்கும் சரியான புரிதல் இல்லை. இருவருக்கும் இடையே உடலுறவு என்பது என்றாவது நடக்கும் நிகழ்வு. பலமுறை கெஞ்சினால்தான் ஒருமுறையாவது அந்த விஷயம் நடந்தேறுமாம்.

அவருடைய மனைவியை விசாரித்தேன். செல்விக்கு சரவணனிடம் எந்தப் புகாரும் இல்லை. அவரைப் பிடித்தும் இருந்தது. ஆனால், அழைக்கும் போதெல்லாம்
செக்ஸுக்கு ஒப்புக்கொண்டால் கணவர் தனது கட்டுக்குள் இருக்கமாட்டாரோ என்ற எண்ணம். அதையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, அவரை தனது சொல்படி நடக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.‘கூப்பிட்டதுமே சரின்னுட்டா புருஷன் உன்னை மதிக்கமாட்டான். பிகு பண்ணினாதான்உன்னேயே சுத்தி வருவான்’ என்று செல்வியின் அம்மா வேறு தூபம் போட்டிருக்கிறார். இப்படி ஆண்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில பெண்கள் செக்ஸுக்கு மறுப்பதை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இது சரியா, தவறா? இந்தப் பிரச்னை பல இளம் தம்பதியரிடம் இருக்கிறது. சண்டையாக ஆரம்பித்து, விவாகரத்தாக வெடிப்பது வரை செக்ஸை மறுப்பதும் முக்கிய காரணம். பெண்கள் மட்டுமல்ல… ஆண்களில் சிலரும் மனைவியோடு தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் தட்டிக்கழிப்பதும் நடக்கிறது. ஒருவர், தன் துணைக்கு உடல்ரீதியிலான சுகம் கொடுக்காமல் மறுப்பதற்கு சில முக்கிய காரணங்கள்…

பார்த்தாலே பிடிப்பதில்லை.
பார்க்க கவர்ச்சிகரமாக இல்லை.
துணையின் வருமானத்தில் திருப்தி இன்மை.
வசதியான வாழ்க்கையை எதிர்பார்த்து, ஏமாறுவது.
பிடித்தாலும் அதை வெளிக்காட்டாமல், துணையைக் கட்டுப்படுத்த உடல்ரீதியான உறவுக்கு மறுப்பது.
இயல்பாகவே செக்ஸில் ஆர்வம் இல்லாமல் இருப்பது.
சுகம் கிடைப்பதற்கு முன்பு விரைவாகவே செக்ஸை முடித்துக் கொள்வது.
கணவனுக்கும் மனைவிக்கும் பணி நேரம் மாறி மாறி அமைவது.

அதனாலேயே, கணவர் விரும்பும் போது மனைவி சோர்வாக இருந்தால், ‘இப்போது வேண்டாமே…’ என்பார்.செக்ஸ் மறுக்கப்படுவதால் ஆணும்
பெண்ணும் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குடும்ப வாழ்க்கை விரிசலுக்கு ஆளாகிறது. தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. செக்ஸ் உறவு மறுக்கப்படுபவர்கள் தங்களை முழுமையான ஆணாகவோ, பெண்ணாகவோ உணர்வதில்லை. வெறுப்புணர்வு, கோபம், தன்னம்பிக்கையை இழத்தல், மன உளைச்சல், வன்முறைக்கு தூண்டுதல் போன்ற விளைவுகளும் நிகழ்கின்றன. ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் பிரிந்து வாழ்வார்கள். நிறைய விவகாரத்துகளுக்கு செக்ஸ் மறுப்பே காரணம்.

உடலுறவு மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தை சக துணையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். உடல்ரீதியாக பிரச்னைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள், அந்தரங்க உறவை காரியத்தை சாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. மூடு இல்லை என்றால் அதைப் பக்குவமாக விளக்குவது நல்லது. ‘முடியாது’ என பட்டென்று கூறி, துணைக்கு செக்ஸ் மீது இருக்கும் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது.

பிரச்னைகளை தம்பதிகள் மனம்விட்டுப் பேசி, உடனுக்குடன் சரி செய்துவிட வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கக் கூடாது. விட்டுக் கொடுத்துப் போவதும் அவசியம். உடல் சுகத்தையும் தாண்டி, உறவை பலப்படுத்தும் செக்ஸை ஒருவருக்கொருவர் மறுக்காமல் இருப்பதே நல்ல தம்பதிகளுக்கு அழகு!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எளிது எளிது வாசக்டமி எளிது!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுகள்!! (மருத்துவம்)