திருநங்கைகளுடன் உறவு கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:33 Minute, 23 Second

ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது?

பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள்.

அதாவது, ஹாஸ்டல் அறையில் நேர்ந்து படிக்கும் மாணவிகள், பிற மாணவிகளின் உறுப்புகளைப் பார்க்க வேண்டிய சூழலுக்கு ஆளாவதால், அதன் மீது ஆர்வம் கொள்கிறார்கள்.

அதுவே அவர்களை ஒன்றுசேர வைக்கிறது. படை வீரர்கள், கப்பல் பணியாளர்கள், சிறைக் கைதிகள் போன்றவர்கள் புணர்ச்சியில் ஈடுபட வழியே இல்லாமல், தன்னுடன் இருப்பவர்களைப் பணியவைத்து ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

இந்த அனுபவத்தில் ஈர்க்கப்படும் ஆண்கள் தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபடுகிறார்கள். போதிய உறவுகொள்ளாமையும் ஒரு காரணமாகிறது.

கணவன் அதிகமான வெளியூர் செல்பவர் அல்லது வெளியூரில் பணிபுரிபவர் எனும்பட்சத்தில், ஆசைகளை அடக்கிவைக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது தோழியர் மீது ஆசைகளைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

ஒரு சில ஆண்கள் அல்லது  பெண்களுக்குப் பிற பாலினம் என்பதைவிட, தங்களைச் சேர்ந்த பாலினம் மீதே அதிக ஆர்வம் ஏற்படுவது உண்டு.

அவர்கள் விருப்பப்படும் நபர்களுடன் செக்ஸில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.

வயசுக் கோளாறு எனப்படும் ஆர்வத்தில், எங்காவது எப்படியாவது செக்ஸ் ஆசைகளைத் தணித்துக்கொள்ள ஆண் அல்லது பெண் ஆசைப்படும்போது, இதுபோன்ற சூழலில் மாட்டிக்கொள்வது உண்டு.

இது தவிர, ஒரு சிலர் உடுத்தும் ஆடைகள், பெர்சனாலிட்டி, தனித்தன்மை போன்றவையும் ஓரினச் சேர்க்கைக்குக் காரணமாக அமைகின்றன.

முறையான செக்ஸ் உறவில் தான் தேடிய இன்பம் கிடைக்காதபட்சத்தில், இதுபோன்ற முறையில் இன்பம் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்குகிறார்கள்.

ஓரினச் சேர்க்கையில்தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள்தான் அனுபவிக்கிறோம் என்பதுதான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கரசோஷமாகும்.

ஏனெனில், ஒரு பெண்ணின் ஆசையை எந்தக் காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்துகொள்ளவே முடியாது.
அதுபோல், ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.

அதனால், இங்கே  ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன.

ஒவ்வொரு கலவியின்போதும் ஓரினச் சேர்க்கயாளர்கள் உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

07-1441626213-affair577 திருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-21) திருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-21) 07 1441626213 affair577

ஆண்களைப் பொறுத்தவரை, வாய் வழி உறவும், பின்பக்க உறவும் பிரதானமாக இருக்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை வாய்வழி உறவும், உறுப்புகளைச் சுவைத்தலும், பிற அந்நியப் பொருள்களைப் பிறப்புறுப்புகளில் நுழைத்துக்கொள்வதும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு பெண், செக்ஸ்  ஆசைகளை வெளிப்படையாகத் தெரிவிக்கும்போது, ஆண் தவறாக நினைத்துக்கொள்வானோ என்ற அச்சம் ஏற்படுவது உண்டு.

அதேபோல், ஆண் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், அவனை செக்ஸ் அடிமை என்றோ செக்ஸ் வெறியன் என்றோ மனைவி நினைத்துக்கொள்வாள் என்ற அச்சம் ஏற்படுவது உண்டு.

இங்கே அதுபோன்ற  எந்தச் சங்கடங்களும் இந்த உறவுகளில் இல்லை என்பதால் சுதந்தரமாக ஈடுபடுகிறார்கள். அதனால், குறைவான இன்பம் கிடைத்தாலும் அதிக இன்பமாகவே தெரிகிறது.

ஓரினச் சேர்க்கை சரியா? தவறா?

சட்டப்படி பார்த்தால் தவறு என்று சொல்லலாம்.

ஆனால், தனிப்பட்ட முறையில் இது   ஒவ்வொரு மனிதனின் ஆசை மற்றும் ஆர்வத்துக்கு வடிகால் ஆகும்.

அனைவரும் இட்லி அல்லது தோசைதான் சாப்பிட வேண்டும் என்று சொல்ல முடியாது என்பதுபோல், அனைவருமே முறையான கலவியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியாது.

அதனால், ஓரினச் சேர்க்கை தனிப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தமானது. இதைச் சரி அல்லது தவறு என்று சொல்ல வேண்டியதில்லை.

ஆனால், ஓரினச் சேர்க்கையாளர்களில் பலர் ஒரே ஜோடியுடன் இன்பம் காண்பதில்லை என்பது பெரும் குறைபாடு ஆகும்.

ஆண்கள் பல ஆண்களுடனும், பெண்கள் பல பெண்களுடனும் உறவுகொள்கிறார்கள். மேலும், இந்தப் பழக்கத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆணுறை பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

அதனால், ஒருவருக்கு நோய் இருக்கும்பட்சத்தில் பலருக்கும் பரவ ஏதுவாகிறது.

சமூகத்தில் இந்த உறவானது பிறருக்குத் தெரியவரும்பட்சத்தில், அவமானமாகக் கருதுவார்கள். அதனால், இந்த உறவில் இருப்பவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய சூழல் வரலாம்.

பொதுவாகவே, ஒரு மாறுதல் என்ற ரீதியில் எப்போதாவது இந்த உறவை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம்.

தொடர்ந்து இதற்கு அடிமையாக மாறாமல் இருப் பது நல்லது. ஆண்கள் அல்லது பெண்களாக இருந்தாலும் ஆசனவாயிலில் கை அல்லது உறுப்புகளை நுழைத்து உறவுகொள்ளும்பட்சத்தில், நோய்த் தடுப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

குரூப் செக்ஸில் ஈடுபடுவது தவறா?

கண்டிப்பாகத் தவறுதான். ஏனெனில், இது பல நேரங்களில் குடும்ப உறவு சீரழியவும், செக்ஸ் வீடியோ, மிரட்டல் என பல்வேறு சிக்கலுக்குக் காரணமாகிறது.

குரூப் செக்ஸில் கலந்து கொண்ட பிறகு, மனைவி மீது கணவனுக்கு இருக்கும் மதிப்பு போய்விடுகிறது. அவளைத் தீண்டத்தகாதவளாகவே, செக்ஸ் வெறி பிடித்தவளாகவே பார்க்கிறான்.

மேலும், நோய் ஏற்படஅதிக வாய்ப்பு உண்டு.

வித்தியாசமான முறைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், எக்காரணம் கொண்டும் குரூப் செக்ஸில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ஓரினச் சேர்க்கையைச் சிறந்த முறையில் அனுபவிப்பது எப்படி?

நேரடியாகப் பிறப்புறுப்புகளில் செய்கையைத் தொடராமல் கண், காது, வாய், மார்பகம் போன்ற இடங்களில் எல்லாம் இன்பத்தைத் தேட வேண்டும்.

பார்ட்னர் பெரும்பாலும் மனத்துக்குப் பிடித்தமானவராக இருப்பார் என்பதால், தன்னுடைய செய்கை பிடித்திருக்கிறதா அல்லது வேறு எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்யலாம்.

முடிந்தவரை, நீண்ட நேரம் உறவை நீட்டிக்க வேண்டும். பார்ட்னரின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து ருசித்து ஈடுபடும்பட்சத்தில், ஓரினச் சேர்க்கையில் பெண்கள் மிக அதிகமான முறை உச்சகட்டத்தை அடைய முடியும்.

ஆண்கள் விந்து வெளியேற்றத்துடன் உச்சகட்டத்தையும் அதிகமுறை அடையலாம்.

திருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா?

திருநங்கைகளுக்கு, ஆண்பெண்ணுக்கு உரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை.

இருந்தாலும் அவை பயன்படுவதில்லை.

அதற்காக, அரவாணிகளுக்குப் பாலுணர்வே இல்லாமலோ அல்லது ஏற்படாமலோ போய்விடுவதில்லை.

ஏனெனில், பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்த்தது அல்ல. மனமும் முக்கியப் பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை, திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாகப் பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாகிறார்கள்.

அதனால், அவர்களுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கமுடியாது.

திருநங்கைகள் பெரும்பாலும் ஆண்களுடன் உறவுகொள்ளவே விரும்புவார்கள்.

அவர்கள் இயற்கையில் ஆண்களாக இருந்தாலும், ஆண் உடல் மீதான ஆசையில்தான் பெண்களாக மாறுகிறார்கள்.

ஆண்களைக் கவரவே பெண்களைப்போல் செயல்படுகிறார்கள்.

ஆண்களுடன் உறவுகொள்ள வேண்டும் என்பதற்காகவே தங்களது ஆண்குறிகளை வெட்டிக்கொள்கிறார்கள்.

அதனால், திருநங்கைகளுடன் ஆண்கள் மட்டுமே அதிக அளவில் கூடுகிறார்கள்.

திருநங்கைகளுடன் பெரும்பாலும் வாய்வழி உறவு மற்றும் ஆசனவாய் உறவு மட்டுமே நிகழ்கிறது.

திருநங்கைகளுடன் பின்னிப்பிணைந்து உச்சகட்டத்தை ரசிக்கும் அளவுக்கு ஆண்கள் அல்லது பெண்கள் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதனால், அவர்களை ஒரு செக்ஸ் வடிகாலாகவே கருதுகிறார்கள் என்பதுதான் உண்மை.

தன் இணையின் சிறுநீரைக் குடிப்பதைச் சில பெண்கள் விரும்புவதாகச் சொல்லப்படுவது உண்மையா? கலவியில் எதுவுமே சரி அல்லது தவறு என்பதில்லை.

மனசுக்குப் பிடித்த துணை கிடைக்கும்பட்சத்தில் எதுவும் செய்ய ஆண்-பெண் இருவருமே தயாராகத்தான் இருப்பார்கள். பி.டி.எஸ்.எம். எனப்படும் வன்முறை மூலம் புணர்தலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

இருவரும் இணைந்து ஆசைப்பட்டு செக்ஸ் புணர்ச்சியில், விருப்பமான எது செய்தாலும் தவறில்லை. தன்னுடைய இணைக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்பட்டுவிடாமல் இருக்க வேண்டும்.

எவ்விதமான நோய்த்தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பன முக்கியக் கொள்கைகளாக இருத்தல் வேண்டும். பெரும்பாலும், இதுபோன்ற காட்சிகள் வீடியோவில் மட்டுமே காணப்படும் என்பதால், பெரும்பாலோர் பின்பற்ற வேண்டியதில்லை.

பின்பற்றுமாறு இணையைக் கட்டாயப்படுத்தவும் கூடாது. ஆண்-பெண் சேர்க்கை, ஆண்-ஆண் சேர்க்கை, பெண்-பெண் சேர்க்கை, குரூப் செக்ஸ் என எப்படி இருந்தாலும், அதன் நோக்கம் முழுமையான இன்பம் அடைதல் என்பதாகும்.

தான் மட்டும் இன்பம் அடையாமல், தனக்கு இன்பம் கொடுத்த பார்ட்னருக்கும் அதிகபட்ச இன்பம் தர வேண்டும் என நினைத்துச் செயலாற்றத் தொடங்கினாலே, உறவு என்பது இனிமையானதாக மாறிவிடும்.

ஏன் வேண்டும் உச்சக்கட்டம்??

த ன்னுடைய  உடலில் எவ்வளவோ இன்பம் பொதிந்து  கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இவ்வளவு காலமும் பெண்கள் கட்டுப்பட்டியாக இருந்துவிட்டார்கள்.

ஆனால், இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி, இன்டர்நெட், தொலைபேசி மூலமாகத் தெரியாத பல விஷயங்களையும் புரியவைத்திருக்கிறது விஞ்ஞானம்.

அதனால், இவ்வளவு காலம் இருந்ததுபோல் இனியும் பெண்கள் ஏமாளியாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

தன்னுடைய இன்பத்தை மட்டும் பெண்களின் உடலில் தணித்துக்கொண்ட ஆண்கள், இனியும் அப்படியே சுயநலவாதிகளாக இருக்க முடியாது.

பெண்களும் இன்பம் வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்காகப் போராடவும் தொடங்கிவிட்டார்கள். பெண்களுக்கு  இன்பம் கிடைக்காதபட்சத்தில், ஆண்களுக்கும்   இன்பம் கிடைக்கப்போவதில்லை  என்பதுதான் இன்றைய நிலை.

அதனால், செக்ஸ் இன்பம் இனி பரஸ்பரம் இருவரும் அனுபவிப்பதாகவே இருக்க வேண்டும். ஒவ்வொரு கலவியின்போதும் ஆண்கள் எளிதில் உச்சகட்டம் அடைந்துவிடுகிறார்கள்.

அதுபோல் ஒவ்வொரு கலவியிலும் பெண்களும் உச்சகட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு உதவி செய்ய வேண்டியது ஆண்களின் கடமையாகும்.

இந்தச் செயல்பாடுகளில் இருந்து ஆண்கள் தவறினால் அல்லது தவிர்த்தால், குடும்ப உறவு சிதையும் சூழல் உருவாகிவருகிறது.

அதனால்தான், இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் குடும்ப வழக்குகள் பெரும்பாலும் ஆண்களால் திருப்திப்படுத்த இயலவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடனே வருகின்றன.

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம்.

இரண்டு மனங்கள் இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடு மட்டுமே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதைப் பெண்கள் இப்போது அறிந்துகொண்டார்கள்.

அதனால், விவாகரத்து என்ற சொல் பெண்களை எந்தவிதத்திலும் இப்போது அச்சுறுத்துவதில்லை. இந்திய திருமணச் சூழலில் திருமணத்துக்கு முன் மணம் செய்துகொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல.

அதனால், திருமணம் முடிந்து நிகழும் உடல் சங்கமத்தின் முதல்படியில் ஏறும்போதே சறுக்கல் எதுவும் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மனத் தடுமாற்றம், ஏமாற்றம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளைச் சுமந்துகொண்டு முதலிரவு அறைக்குள் நுழைந்தால் வேதனைதான் மிஞ்சும்.

எனக்கு அழகான மனைவி கிடைக்கவில்லை. மனைவியின் அணுகுமுற்யே சரியில்லை. செக்ஸ் விஷயத்தில் ஒண்ணுமே தெரியவில்லை என்ற ஆதங்கமான குற்றச்சாட்டுகளை ஆண்கள் சுமத்துவது உண்டு.

தங்களது மனத்தில் எழுந்த ஆசைகளை மாயக்கண்ணாடியில் தெரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பது ஆண்-பெண் இருபாலரின் ஒருமித்தக் கருத்து.

ஆனால், சில ஆசைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதைவிட செயலில் காட்ட முனைவது மனித இயல்பு.

அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும்.

பரீட்சை எழுதும்முன் எப்படி பாடங்களைப் படித்து தயாராகிறோமோ, அப்படித்தான் முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனத்தெளிவுடன், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். செக்ஸ்தானே என்று அலட்சியமாக இருந்துவிட்டு  உங்களறது ஆசைகளை நிறைவேற்ற முனைந்தால் உங்களுடைய எதிர்பார்ப்புகள் தோற்றுப்போகும்.

இது எத்தனையோ தம்பதிகள் வாழ்க்கையில் நடந்துள்ளது.

thumbnail திருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-21) திருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-21) thumbnail

முதலிரவு சம்பவங்களைப் பலர் தங்களது வாழ்க்கையில் நினைத்துப் பார்ப்பது உண்டு. பலருக்கு, இனிமையான நினைவுகளாக இருக்கும்.

பலருக்கு, வேதனையாக இருக்கும்.

அன்றைய தினம் மனத்தில் ஏற்பட்ட காயம் ஆறாமல் உறுத்திக்கொண்டே இருக்கும். அந்தத் தோல்வியில் இருந்து ஆண் அல்லது பெண் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உடனே செக்ஸ் பற்றி முழுமையான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தேடித்தேடி இன்பங்களைக் கண்டறிந்தால் மட்டுமே, இந்த பந்தத்தை நிலைத்து நிற்கச் செய்யமுடியும்.

இன்பம் பற்றிய அறிதல் எதுவும் இன்றி, தன்னுடைய இன்பத்தை மட்டுமே ஆண் பெரிதாக நினைத்தால், பெண் மன்னிக்கமாட்டாள்.

அதனைப் பொருந்தா திருமணம் என்று பிரிந்துவிடுவாள். இன்பம் தராதவன் பற்றி முந்தைய காலங்களில் வெளியே சொல்ல பெண்கள் கூச்சப்பட்டார்கள்.

ஆனால், இப்போது தன் மீது தவறு இல்லாதபட்சத்தில், ஆனின் குறைபாடுகளை, அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை என்று பெண்கள் முடிவு எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இன்றைய தினம், பல்வேறு காரணங்களைக் காட்டி விவாகரத்து பெற இயலும்.

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறு ஒருவருடன் விரும்பி உடலுறவுகொள்ளுதல்.

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்.

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கைவிட்டுச் செல்லுதல்.

4. தம்பதிகளில் ஒருவரு தீர்க்கமுடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்.

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருத்தல்.

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் உள்ளாரா, இல்லையா என்று தெரியாதிருத்தல்.

7. திருமணமான கணவன், ஓரினப் புணர்ச்சி மற்றும் விலங்குகளுடன் புணர்ச்சி (Beastility) வைத்திருத்தல்.

8. ஆண்மையற்று இருத்தல் அல்லது பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருத்தல்.

9. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள குற்றம் ஒன்றுக்காக ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை பெறுதல் போன்ற சூழ்நிலைகளில் மணமுறிவு (விவாகரத்து) கேட்டு மனு செய்யலாம்.

கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக் கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கணவன் மூன்று ஆண்டுகளுக்குப் புறக்கணித்தால், கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்துக்குத் தேவையான மனவளர்ச்சி இல்லாமல் இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றம் இருக்கிறது.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பம் இல்லாமல் நீடிக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சில சூழ்நிலையில், செக்ஸ் குறைபாடு ஆண் அல்லது பெண்ணுக்கு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. இதில் மனநலப் பாதிப்பு முதல் இடத்தைப் பிடிக்கிறது.

அதாவது பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி ஆகியவற்றால் ஏற்படக்கூடிய மன நோயும், செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது.

இவைதவிர, ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளின் குறைபாடுகளால் உண்டாகும் பாதிப்புகள், தைராய்டு சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புகள், ஆண்-பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் காரணமாகவும் செக்ஸ் குறைபாடு ஏற்படலாம்.

இதனால், செக்ஸ் அனுபவிக்க விரும்பம் இன்றி இருக்கலாம். அடுத்த முக்கியப் பிரச்னை சர்க்கரை நோய். சிறுநீரகக் கோளாறுகள், ரத்த சோகை போன்றவற்றாலும் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற காரணிகளால், செக்ஸ் குறைபாடுகள் ஏற்படும்பட்சத்தில், உடனடியாக தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது, பேசி நிலைமையைப் புரியவைப்பது போன்றவை மிகவும் முக்கியமாகும்.

உடல் நலத்துக்கு முக்கியப் பங்கு! தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்-மனைவி இருவரின் உடல்நலமும், மனநலமும் முக்கியம் என்பதைப் பார்த்தோம்.

அதனால், அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* எந்தச் சந்தர்ப்பத்திலும், பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளைச் சாப்பிடக் கூடாது.

* சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால், முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால், செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.

* உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமாறலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் உறவில் முழுமை பெற முடியும்.

* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால், தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

* கோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால், மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல.

மேலும், ஆழ்ந்த மன பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்குப் பெரும் எதிரியாகும். * தாம்பத்தியத்தில் ஒரேமாதிரி செயலாற்றும் இயந்திரத்தனங்கள் இனிமை தராது. அதேநேரத்தில், அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.

* மனமும் உடலும் ஒத்துழைக்கும்வரை அடிக்கடி உளவுகொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டால், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்து இன்பம் அடையமுடியும்.

* வயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவுகொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.

* கணவன்-மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால், இப்படிப் பேசினால் அநாகரிகம் , அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை.

படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் இதுபோன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ளக் கூடாது.

இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள அதிகம்.

இதை மனைவி  புரிந்துகொள்ளாதபட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது.

எனவே, ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும். * அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.

அவர்களது விரும்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸ் இணையத் தளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவுகொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.

* தாம்பத்திய உளவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கு உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண்–பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்கக்கூடியவை.

* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும்முன், தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது.

குளிக்கமுடியாதபட்சத்தில் உடலை நன்றாகத் தேய்த்துக் கழுவி, வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* இருவரும், தூக்கத்துக்குப்போகும்முன் கலவி நேரத்தைத் தேர்வுசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் வந்து வீட்டில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கணவன் நினைத்தால் அவள் தயாராக இருக்கமாட்டாள். ஏனெனில், நீண்டநேரம் கணவனுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோயிருக்கும் அவளால், உடனடியாக கலவிக்குத் தயாராக முடியாமல் போகும்.

* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றைத் தேர்வுசெய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும்போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்லமுடியும்.

கூட்டுக்குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால், இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்குக் கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல், கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும்போதுதான், இருவரும்  ஆசைப்பட்டதைக் கேட்கவும், கொடுக்கவும் முடியும்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று, உச்சகட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதையே இதுவரை சொல்லி, அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.

குறிப்பாக, தாம்பத்தியத்தில் உச்சகட்ட இன்பத்தைத் தொட்ட பெண்கள், ஆண்களிடம் மிகவும் அன்பாகவும், இனிமையுடனும் பழகுவார்கள்.

அவளுக்குக் கிடைத்த சந்தோஷத்தைப் பல மடங்கு அதிகமாக ஆணுக்குத் தருவாள். பெண் சந்தோஷமாக இருந்தால், அந்த சந்தோஷத்தைக் குடும்பத்தில் காட்டுவாள்.

அதனால், அந்த வீடு ஒரு கோயிலாக ஒளிவீசும். அந்த இல்லமே நல்ல இல்லமாக பிறருக்கு வழிகாட்டும். அனைவரையும் சந்தோஷமாக வாழவைக்கும். ___

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)
Next post மலச்சிக்கல் சித்தா தீர்வு! (மருத்துவம்)