தேக ஆரோக்கியம் காக்கும் தேங்காய் பூ!! (மகளிர் பக்கம்)
தேங்காய் பூ என்பது நன்றாக முற்றிய தேங்காயில் தோன்றும் கரு வளர்ச்சி. இளநீர் மற்றும் தேங்காயில் இருக்கக்கூடிய சத்துக்களை விட அதிக சத்துக்களை கொண்டுள்ளது தேங்காய் பூ. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என்பதால் இதை உண்பதால் அதிக அளவு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக உள்ளது. இதனால் பருவகால நோய் தொற்றிலிருந்து நம்மை காக்கக்கூடிய இரு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியினை நமக்கு அளிக்கிறது.
* உடல் அசதிகளை போக்கக்கூடிய அருமருந்தாக தேங்காய் பூ விளங்குகிறது.
* இதிலுள்ள சத்துக்கள் மன அழுத்தத்தை போக்கக் கூடியது.
* தேங்காய் பூ இன்சுலினை தூண்டி நமது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
* தைராய்டு பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.
* உடல் எடையை குறைத்து, உடல் பருமனை கட்டுக்குள் வைக்கிறது.
* ரத்தத்தில் சேரக்கூடிய கொழுப்பை குறைத்து ரத்தத்தை சீராக ஓடச் செய்யும்.
* புற்று நோய் செல்களை தூண்டக்கூடிய ப்ரீ ரேடிக்கலை வெளியேற்றி நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
* உடல் எடையை கட்டுக்குள் வைக்க தேங்காய் பூ பெருமளவில் உதவுகிறது.
* உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் உடலில் கொழுப்பு தங்காமல் பார்த்துக்கொள்கிறது.
* கிட்னி சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளுக்கு தேங்காய் பூ சாப்பிடுவது மிகவும் நல்ல பலனை தருகிறது. சிறுநீர் தொற்றை குறைக்கிறது.
* நமது சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதில் தேங்காய் பூ சிறந்தது.
* அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டதால் சரும சுருக்கங்களை நீக்குகிறது.
* இது நமது ஜீரண கோளாறை சரி செய்து செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கலுக்கு நல்ல நிவாரணியாக இருக்கிறது.
* குடலில் தங்கியுள்ள நாள்பட்ட கழிவுகளை கூட வெளியேற்றக்கூடியது.
* வாய்ப்புண், வயிற்றுப் புண்ணுக்கு மிகச் சிறந்த நிவாரணி தேங்காய் பூ.
* பாத வலி, பாத எரிச்சலை சரி செய்யக்கூடியது.
* தேங்காய் பூவை எடுத்ததும் மீதமிருக்கும் தேங்காயை நன்றாக அரைத்து தலையில் பூசி ஊறவைத்து அலச தலைமுடி கருமையாக பளபளப்பாக இருக்கும்.