பெண்கள் படித்து உயர்ந்தால் இல்லம் உயரும்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 50 Second

தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து மாணவர்களும் பெற்றோர்களும் எந்த படிப்பை படிப்பது, எந்தக் கல்லூரியில் சேர்வது என ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். கல்வி நிறுவனங்களோ “உயர்தர கல்வி, உடனடி வேலை வாய்ப்பு” என மக்களை கவரும் வாக்குறுதிகளோடு விளம்பரங்கள் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய தெளிவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருப்பது அவசியம்.

என்ன படித்தால், எங்கு படித்தால் வேலை கிடைக்கும் என்ற வினாவிற்கான எளிதான விடை, ‘‘எந்த படிப்பாக இருந்தாலும் அதை கவனமாக படித்தால் வேலை நிச்சயம்’’ என்கிறார் கல்வியாளர் ராஜராஜன். அவர் பெண்களுக்கேற்ற படிப்புகள் குறித்து தெரிவித்துள்ளார்.பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கல்வி பயில்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் திறமையுடையவர்கள் என்றாலும், சில பல படிப்புகள் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இன்றைய நிலையில் பெண்களுக்கு ஏற்புடையது அல்ல என்ற படிப்புகள் மிகக் குறைவே!

பொறியியல் துறையை பொறுத்தவரை அனைத்துத் துறைகளிலும் சேர்ந்து படிக்கிறார்கள் என்றாலும் கூட, அவர்களுக்கேற்றது BE / B.Tech.

1).Electronics and Communication (மின் அணுவியல் மற்றும் ெசய்தித் தொடர்பு)
2).Computer Science and Engineering (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்)
3).Information Technology (தகவல் தொழில்நுட்பம்)
4).Bio Medical Engineering (உயிர் மருத்துவ பொறியியல்)
5).Bio Technology (உயிர் தொழில் நுட்பம்)

6).Medical Electronics (மருத்துவம் மின் அணுவியல்)
7).Electronics and Tele Communication (மின் அணுவியல் மற்றும் தொலை தொழில் நுட்பம்)
8).Computer Sign and Design (கணினி குறியீடு மற்றும் வடிவமைப்பு)
9).Computer Science and Engineering (Artificial Intelligence and Machine learning) (கணினி அறிவியல், பொறியியல் செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கல்வி)
10).B.Tech – Artificial Intelligence and Data Science (செயற்கை நுண்ணற்ற மற்றும் தரவு அறிவியல்)

11).B.Tech (Computer Science and Business System) (கணினி அறிவியல் மற்றும் வணிக முறைகள்).
12).B.Tech (Polymer Technology) (பாலிமர் தொழில்நுட்பம்)
13). B.Tech (Plastic Technology) (பிளாஸ்டிக் தொழில்நுட்பம்)
14).B.Tech (Textile Technology) (ஆடை தொழில்நுட்பம்)
15).B.Tech (Food Technology) (உணவு தொழில்நுட்பம்)
16). B.Tech (Handloom and Textile Technology) (கைத்தறி மற்றும் ஆடை தொழில்நுட்பம்) என்பவையாகும்.

எதிர் மின் அணு (எலக்ட்ரானிக்ஸ்), கணினி (Computer) சாராதத்துறைகள் எடுத்துப் படிப்பவர்கள் தற்போதைய தொழில்நுட்பங்களை அறிய, சென்னை- இந்திய தொழில்நுட்பக்கழகம் (Indian Institute Technology) இணையம் வழியே தரும்.

1).B.Sc (Data Science and Programming) (தரவு அறிவியல் மற்றும் புரோகிராமிங்)

2).B.Sc (Electronics and Embedded System) – (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எம்பெட்டம் சிஸ்டம்) என்ற படிப்புகளை, பொறியியல் படிப்புகளை படித்துக் கொண்டே இணையம் வழியாக படிக்கலாம்.

*மருத்துவத் துறையை நாடுபவர்கள் MBBS, BDS என்ற பிரிவுகளைத் தாண்டி,
*BAMS (ஆயுர்வேத மருத்துவம்)
*BSMS (சித்த மருத்துவம்)
*BHMS (ஹோமியோபதி மருத்துவம்)
*BUMS (யுனானி மருத்துவம்) NEET கீழே வரும் படிப்புகளை கருத்தில் கொள்ளலாம்.
*BNYS (இயற்கை மற்றும் யோக அறிவியல்) என்ற படிப்பிற்கு NEET தேவையில்லை. மேலும் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் NEET தேவையில்லை. +2 மதிப்பெண் அடிப்படையில் இடம் தரப்படும்.

*B.Sc (Nursing)
*B.Sc (Audiology & Speech Language Pathology)
*B.Sc (Cardiac Technology)
*B.Sc (Electro Phycology)
*B.Sc (Bachelor of Physio Therapy)
*B.Sc (Cardiac Pulmonary Perfusion Technology)

*B.Sc (Neuro Electro Psychology)
*B.Sc MLT (Medical Lab Technology)
*B.Sc Operation Theatre and Anesthesia Technology
*B.Sc Optom (Ophthalmology)
*B.Sc (Radiography & Imaging Technology)

*B.Sc (Radiography Technology)
*B.Sc (Medical Record Science)
*B.Sc (Respiratory Therapy)
*B.Sc (Clinical Nutrition)
*B.Sc (Clinical Research)
*B. Pharm (Pharmaceuticals)

விவசாயம்

விவசாயம் சார்ந்த படிப்புகளை நாடுவோர், ICAR (The Indian Council of Agricultural Research) தேர்வை எழுதி தேசிய விவசாய பல்கலைக்கழகங்களில்
சேரலாம். மேலும் தமிழ்நாடு விவசாயக் கல்லூரிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் B.Sc (Hons) Horticulture (தோட்டக்கலை), Forestry (வன
வியல்), Seri Culture (பட்டுப்புழு வளர்ப்பு), BBA (Agri Business Management) ( வேளாண் வணிக மேலாண்மை), B.Tech (Energy and Environment Engineering) (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), Agricultural Engineering(விவசாய பொறியியல்), Bio Tech (உயர் தொழில்நுட்பம்) Agricultural Information Technology (விவசாய செய்தித் தொழில்
நுட்பம்), Bio Information (உயிர் தொழில்நுட்பம் செய்தி) படிக்கலாம்.

தமிழ்நாடு (மீன் வள) பல்கலைக்கழகப் படிப்புகள்

*B.Sc (Fishery Science) மீன் வள அறிவியல்
*BTech (Fishery Engineering) மீன் வள பொறியியல்
*B.Tech (Energy & Environmental Engineering) ஆற்றல், சுற்றுப்புற பொறியியல்)
*B.Tech (உயர் தொழில் நுட்பம்)
*BBA (Fisheries Enterprise Management) (மீன் வள தொழில் மேலாண்மை)

சட்டம்

தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சட்டம் படிக்க CLAT (Common Law Admissive Test), ALET (All India Law Entrance Test)
தேர்வினை எழுத வேண்டும். தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் போதுமானது.

ஆடை வடிவமைப்பு
National Institute Fashion Technology (NIFT) படிப்புகள்

*B.Des (Fashion Design) (ஆடை ஆபரண வடிவமைப்பு)
*Leather Design (தோல் வடிவமைப்பு)
*Accessory Design (உப பொருட்கள் வடிவமைப்பு)
*Textile Design (ஆடை வடிவமைப்பு)
*Knit Wear Design (நிட்லேர் டிசைன்)
*Fashion Communication (ஃபேஷன் கம்யூனிகேஷன் என்பவையும்).
*BFTech (Apparel Production) என்பவையாகும்.

NID (National Institute Design) UCEED வழியாக பெறும் படிப்புகள்

*B.Des (Fashion Design), (Games Design), (Graphic & Communication Design), (Animation) ஆக்கப்பூர்வ சிந்தனையும், கட்டிடக்கலையில் நாட்டமும் உள்ளவர்களுக்கு ஏற்றது.
மற்றுமொரு பிரிவு B.Arch (Bachelor of Architecture ) என்னும் கட்டிடக் கலைப்படிப்பு.

கட்டிடக்கலைக்கு (Council of Architecture), NATA (National Aptitude Test in Architecture) தேர்வு வழியாக இப்படிப்பிற்கான இடங்களை பெறலாம்.

இந்திய பாதுகாப்பு படை

இன்றைய நிலையில், சாதனை உணர்வும், தேசப் பற்றும் உள்ள பெண்கள் விரும்புகின்ற மற்றுமொரு பிரிவு இந்திய பாதுகாப்பு படையில் அதிகாரிகளாக சேர்வது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தேசிய பாதுகாப்பு படையின் ராணுவப் படை (Army), கடல் படை (Navy), வான் படை (Air Force), பாதுகாப்பு படை விமான (Defence Pliot) பிரிவுகளின் படிப்பும் அதன் பின்னான அதிகாரிப் பதவியும் பெற வழிவகுக்கும். National Defence Academy (NDA) (தேசிய பாதுகாப்புக் கழகம்) பெண்களும் இவற்றில் பங்கு பெற அனுமதி அளித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின், நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு இவற்றிற்கு பின் Commercial Pilot (Cpl) பயிற்சி பெற பெண்களுக்கு வாய்ப்புள்ளது. NDA வழியாக ராணுவ விமானியாகலாம். விமானிப் பயிற்சியில் தில்லியில் உள்ள Indira Gandhi Rasht Riya Uran Academy, Bombay Flying class , Rajeev Gandhi Academy of Aviation Technology, National Flying Training School போன்ற விமானிப் பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

Air Hostess (விமானப் பணிப் பெண்) பயிற்சியும் பெறலாம்.

ஹோட்டல் நிர்வாகம்

National Counsel of Hotel Management and Catering Technology (NCHMCT) நுழைவுத் தேர்வின் மூலம் BSc (Hospitality and Hostel Administration) படிக்கலாம்.

இசை மற்றும் ஓவியம்

இசை, நடனம் உள்ளிட்ட கலைகளில் விருப்பமும், திறமையும் உள்ள பெண்கள் வாய்ப்பாட்டு, பரதம், வீணை, மிருதங்கம், நாதஸ்வரம் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தில் சேரலாம்.

BFA (Bachelor of Fine Arts), BFA (Drawing, Paintings) என்ற படிப்புகளும், ஓவியம் (Drawing), Painting (வண்ணம் தீட்டுதல்), Sculpture (சிற்பக்கலை), Visual Communication and Design (காட்சி செய்தித் தொடர்பு மற்றும் வடிவமைப்பு), Industrial Design in Textiles (ஆடை தொழிலக வடிவமைப்பு), Print Making (அச்சு உருவாக்கம்).

ஊடகம்

பொதுமக்கள் தொடர்பு, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகப் படிப்புகள் குறிப்பிடத்தக்க கலையாகும். Journalism, Media Studies, Mass media, Film making போன்ற படிப்புகள் வரவேற்பை பெறுகின்றன. திரைப்படத் துறையை விரும்புகிறவர்கள் Cinematography, Film Technology, Screen Play curating, film Editing போன்ற படிப்புகளில் கவனம் செலுத்தலாம்.

கணக்கியல் துறையில் B. Com, BBA இவற்றுடன் CA படிப்புகளும், Company Secretary, Cost Accounts, இன்சூரன்ஸ் (Insurance). இளநிலை கலை பட்டப்படிப்புகளில் இலக்கியம் (தமிழ், ஆங்கிலம்), உளவியல், தொல்பொருள், சமூகப் பணி, பொருளாதாரம், அரசியல் படிப்புகள் உள்ளன. இளநிலை அறிவியல் படிப்புகளான, Fashion Designing, Animation, Nutrition and Dietetics, Micro biology, Visual Communication. கணிதம், புள்ளியியல், இயல், வேதியியல், இயற்பியல், Biology, Ecology, உயிர் வேதியியல் போன்ற படிப்புகளும் உள்ளன.

IAS, IPS இந்தியக் குடிமைப்பணி பதவியை நாடும் பெண்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை தேர்வு செய்து பின், Preliminary மற்றும் முக்கிய தேர்வுக்கு பிறகு நேர்முகத் தேர்வை சந்தித்து பின் இப்பதவிகளை பெறலாம்.

எந்த நோக்கத்திற்காக படிக்கின்றோம் என்பதை பாரதி கண்ட புதுமை பெண்களாக மாணவிகள் தமது இலக்கை தீர்மானித்து அதற்கு ஏற்றார் போல் படிப்பை தேர்ந்தெடுப்பது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கியத்தை காக்கும் அக்ரூட்!! (மருத்துவம்)