கன்னத்தில் ஓவியம்!!! (மகளிர் பக்கம்)
கனடா நாட்டில் உள்ள ரெஜைனா என்ற ஊரில் இருக்கும் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் மாணவிகளுக்கு டீச்சர்களே ஓவியர்களாக மாறி கன்னத்தில் விதவிதமான ஓவியங்களை வரைந்து, மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். அவர்களை வரைந்த “முக ஓவியம்” குறித்த ஒரு கண்ணோட்டம்.
* சருமத்திற்கு அலர்ஜியினை ஏற்படுத்தாத ஸ்பெஷல் பெயின்ட்களை பயன்படுத்தி, மாணவிகளின் கன்னம், நெற்றி, மூக்கு, தாடை என அவர்கள் விரும்பிய ஓவியங்களை வரைந்தனர்.
* இதில் பல மாணவிகளின் விருப்பம் மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெரி படங்களாக இருந்துள்ளது.
* ஒரு மாணவி தன் முகத்தில் மறைந்து போன அவளின் பாட்டியின் படத்தை வரைந்து கொண்டாள்.
* மற்றொரு மாணவி 80 வயது மூதாட்டி போல் பெயின்ட் செய்து அவளின் பருவத்தை மாற்றி அமைத்துக் கொண்டாள்.
* அம்மா, அப்பா பிரிந்துவிட்ட நிலையில் வளரும் குழந்தை தன் அப்பாவின் முகத்தை இரு கண்ணத்தில் நிரந்தரமாக வரைய விரும்பினாள். காரணம், அவளுடைய அம்மா அடிக்கடி அவளின் கன்னத்தில் முத்தமிடுவாராம். அப்பா படம் இருந்தாலும் வேறு வழி இன்றி அம்மா முத்தம் தருவாள். அப்படி கொடுக்கும் பட்சத்தில் மீண்டும் அப்பா மீது காதல் மலர்ந்து இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று அந்த மாணவி சொன்னதும் ஆசிரியர்களும் மற்ற மாணவிகளும் கண் கலங்கி விட்டனர்.
* ஒருவர் அன்பை எதிர்பார்க்க, மற்றவர் வெறுப்படைய வேண்டும் என்பதற்காக ஒருவரின் புகைப்படத்தை வரைய சொல்லி இருக்கிறாள். அவர்களை பிடிக்காததால், அவர் முகம் வரையப்பட்ட கன்னத்தில் அவளே தன்னை அறைந்து கொண்டு, அவர்களை அடிக்க முடியாத குறையை தீர்த்துக் கொள்வதாக கூறியுள்ளாள்.
* என் அம்மா சாமி கும்பிடு கோயிலுக்கு ரொம்ப தூரம் போகவேண்டும். இதனால் அவரின் கால் வலிக்கிறது. என் நெற்றி, இரண்டு கன்னத்திலும் கர்த்தர் படங்களை வரைந்தால், அம்மா கஷ்டப்படாமல் என் முகத்தை பார்த்து சந்தோஷமாக சாமி கும்பிடுவார் என்று சொல்லி ஒரு மாணவி கர்த்தரின் படத்தினை வரைந்து கொண்டுள்ளார்.
* ஒரு மாணவி முகம் முழுக்க படங்கள் வரைந்த பிறகும் இன்னும் வரைங்கன்னு ஆசிரியரிடம் சொல்லி இருக்கா! உடனே அடுத்து கழுத்தில்தான் வரையணும்னு பிரஷை எடுக்க வேண்டாம் இதுவே போதும் என்று முடிவுக்கு வந்துள்ளாள்.
* முகத்தில் வரைய பயன்படுத்திய பெயின்ட்கள் எல்லாம் சோப்பு போட்டு கழுவினாலே நீங்கிடும் என்பதால் மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் முக ஓவியம் வரைந்து கொண்டனர்.