முகப் பொலிவை மேம்படுத்தும் பூக்கள்!! (மருத்துவம்)
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில், பூக்கள் முக அழகை பராமரிக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்:
சாமந்திபூ: இது வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகுபெற செய்கிறது.
தேவையானவை:
சாமந்தி பூக்கள் 3,
பால் 1 தேக்கரண்டி,
யோகர்ட் – 1 தேக்
கரண்டி, துருவிய கேரட் -2 தேக்கரண்டி.
செய்முறை: முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி பூ இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும்.
ரோஜா பூ
தேவையானவை:
ரோஜாப் பூ- 1,
பால் – 1 தேக்கரண்டி,
கோதுமை தவிடு 1 – தேக்கரண்டி.
செய்முறை: முதலில் ரோஜாப் பூவின் இதழை நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவிடையும் சேர்த்து அரைத்துக் கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெறும். செம்பருத்தி பூ: செம்பருத்தி பூ முடி பிரச்னையை சரி செய்வதோடு, முக அழகை பராமரிக்க உதவுகிறது.
தேவையானவை:
செம்பருத்தி பூ -1,
தயிர் – 1 தேக்கரண்டி,
முல்தானி மட்டி- 2 தேக்கரண்டி,
ரோஜா பூ – 1.
செய்முறை: முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும்.