நாங்க கொஞ்சம் ரக்கெட் ஃப்ரெண்ட்ஸ் ! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 59 Second

நட்பு… எந்த தடை வந்தாலும் நான் உன்னுடன் இருக்கேன்னு ரொம்ப உறுதியா நமக்கு பக்கபலமா நிக்கணும். சொல்லப்போனால் நமக்காக இருக்கணும். உனக்கு நான் எப்போதும் இருப்பேன். என்னுடைய தோளில் நீ தைரியமாக சாய்ந்து கொள்ளலாம் என்ற ஃபீலிங்கை ெகாடுக்கணும். நாம தப்பே செய்திருந்தாலும், அது தப்புன்னு எடுத்துச் சொல்லி திருத்தணும். அதுதான் உண்மையான ஃப்ரெண்ட்ஷிப். அப்படிப்பட்ட நண்பர்களை நான் பொக்கிஷமாக பாரக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட ஒரே ஒரு தோழி உண்மையா இருக்கான்னு சொல்வதை பெருமையா நினைக்கிறேன். காரணம், சில நட்புகளால் நான் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். அப்படிப்பட்ட மன வலியினை மீண்டும் நான் சந்திக்க விரும்பவில்லை’’ என்று மனம் திறக்கிறார் வானத்தைப் போல புகழ் சாந்தினி.

‘‘எனக்கு எதையும் நேர்மறையாகத்தான் சிந்திக்க தோன்றும். அதனால் எப்போதும் பாசிடிவ் மனநிலையை கொடுக்கக்கூடிய விஷயத்தை மட்டும்தான் நான் எடுத்துக் கொள்வேன். நான் அப்படி இருப்பதால், என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் என்னால் முடிந்த பாசிடிவ் வைப்பினை கொடுக்க விரும்புவேன். தப்பா பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. அதை என் மனசில் போட்டு குழப்பிக்கணும். நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கு. அது கடவுள்ன்னு நாம சொல்றோம். அவர்தான் எவ்வளவு பிரச்னை வந்தாலும் அதை எதிர்க்கக்கூடிய ைதரியத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் என்றாலும் நான் பிறந்தது படிச்சது எல்லாம் சென்னையில் தான்.

அப்பா வங்கி துறையில் மேலாளராக இருந்தார். அதனால் இரண்டு வருஷத்திற்கு ஒரு முறை அவருக்கு அலுவலக மாற்றம் வரும். ஒவ்ெவாரு இரண்டு வருஷமும் நான் பள்ளி மாற்றிக் கொண்டு இருக்க வேண்டியதாக இருந்தது. +2 முடிச்சதும் இன்டீரியர் துறை சார்ந்து படிக்கலாம்ன்னுதான் நினைச்சேன். எனக்கு ஆர்கிெடெக்ட் மற்றும் இன்டீரியர் இரண்டுமே ரொம்பவுமே பிடித்த துறை. அதனால் அது சார்ந்துதான் படிக்க விரும்பினேன். ஆனால் +2 படிக்கும் போதே நான் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது.

அப்படித்தான் எனக்கு ஊடகத்துறை அறிமுகமானது. ஆர்கிடெக்ட் துறையில் ஏதாவது செய்யணும் என்பது என்னுடைய கனவு. அதே சமயம் ஒரு ஆர்டிஸ்டா கலைத் துறையில் இருக்கவும் நான் விரும்பினேன். கனவா என்னுடைய மனசுக்கு பிடிச்ச கலைத்துறையான்னு யோசித்த போது நான் கலைத்துறையை தான் தேர்வு செய்தேன். நடன நிகழ்ச்சி முடிச்ச கையோடு ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அதன் பிறகு சரவணன் மீனாட்சி, சுமங்கலி, வம்சம்…ன்னு என்னுடைய பயணம் தொடர ஆரம்பிச்சது. இந்த எட்டு வருஷத்தில் கிட்டத்தட்ட 20 சீரியல்களில் நான் நடிச்சிருக்கேன். இப்போது வானத்தைப் போல, ஈரமான ரோஜாவே இரண்டு சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். இரண்டு தொடருமே எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கு.

வானத்தைப் போல வாய்ப்பு எனக்கு சித்த 2 சீரியல் மூலமா கிடைச்சது. அந்த தொடரில் நான் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிச்சிட்டு இருந்தேன். அப்ப வானத்தைப் போல தொடரில் பொன்னி கதாபாத்திரத்தில் பிரீத்தி நடிச்சிட்டு இருந்தாங்க. அவங்க சில காரணங்களால் அதில் இருந்த நீங்கிட்டாங்க. மேலும் எங்க கதாபாத்திரம் நெகடிவ்வா அடுத்த காட்சியில் இருந்து மாற இருப்பதாக சொன்னாங்க. நான் சித்தி 2 வில் நெகட்டிவ் ரோல் செய்திட்டு இருந்தேன். அதைப் பார்த்து ரவி சார்தான் நான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமா இருப்பேன்னு என்னை தேர்வு செய்தார். இன்னும் சொல்லப்போனா நான் நடிக்கும் இன்னொரு சீரியலான ஈரமான ரோஜாவிலும் நெகடிவ் கதாபாத்திரம் தான் செய்றேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப சாப்ட் பொண்ணு’’ என்று சிரித்துக் கொண்டே தன் நட்பு உறவுகளைப் பகிர்ந்தார்.

‘‘என்னாட ஸ்கூலில் படிச்ச போது நிறைய தோழிகள் இருந்தாங்க. இப்பவும் இருக்காங்க. ஆனால் அதில் பவித்ராவோட மட்டும்தான் நான் இப்ப வரைக்கும் டச்சில் இருக்கேன். காரணம், எல்லாரும் கல்யாணம், குடும்பம், வேலைன்னு பிசியா இருக்காங்க. நானும் அப்படித்தான். மாசம் 30 நாளும் ஷூட்டிங்ன்னு ஓடிக் கொண்டு இருக்கேன். அதில் நேரம் கிடைக்கும் போது என் மனசில் உள்ளதை ஷேர் செய்ய நினைக்கும் போது பவித்ராவுக்கு தான் போன் செய்து பேசுவேன்.

எனக்கு எல்லா நாளும் ஷூட்டிங் இருப்பதால் மாசத்தில் இரண்டாவது ஞாயிறு மட்டும் தான் விடுமுறை. அன்று அவங்க தங்களின் குடும்பத்துடன் பிசியா இருப்பாங்க. அப்படி நான் பிளான் செய்து வெளியே போனது என்னுடைய சீரியல் குடும்பத்துடன் தான். வானத்தைப் போல தொடரைப் பொறுத்தவரை நான் இதில் சேர்ந்து ஒரு வருஷம் தான் ஆகுது. ஆனால் பிரியமானவள், காற்றின் மொழி சீரியலில் உள்ளவங்க எல்லாரும் குடும்பமாதான் பழகுவோம். அவங்களுடன்தான் அடிக்கடி ெவளியே போவேன். டெக்னீஷியன், கேமராமேன், ஆர்டிஸ்ட்ன்னு எல்லாரும்
ஒன்னாதான் சுத்துவோம்.

மீடியா பொறுத்தவரை நான் எல்லாருடனும் ரொம்ப க்ளோசா பழகமாட்டேன். எனக்குன்னு ஒரு பாலிசி இருக்கு. என்னைப் பற்றி எனக்கு மட்டும் தெரிந்தா போதும். மத்தவங்களுக்கு தெரியப்படுத்த அவசியமில்லைன்னு நான் நினைப்பேன். என்னைப் பற்றி நான் யாரிடமும் வெளிப்படையா சொல்ல மாட்டேன். காரணம், நான் கொஞ்சம் எமோஷனல் கேரக்டர். அதை மத்தவங்க தப்பா பயன்படுத்தி என்னை காயப்படுத்தி இருக்காங்க. அதனாலேயே நான் கொஞ்சம் கவனமா இருக்கேன். அதற்காக நான் நட்புடன் பழகமாட்டேன்னு அர்த்தம் இல்லை. எல்லாருடனும் ஃப்ரெண்ட்லியா இருப்பேன். வெளியே போவேன்.

ஜாலியா ஊர் சுத்துவேன். அது எல்லாம் என் வீட்டு வாசலுக்கு வெளியேதான். என்னுடைய கூட்டிற்குள் வந்துட்டா நான் நானாகத் தான் இருப்பேன். சும்மா அவங்களுக்கு மெசேஜ் செய்து தொந்தரவு செய்ய மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அப்படித்தான். இங்க இருக்கிற வரைக்கும் ரீல்ஸ் செய்திட்டு ஜாலியா இருப்பேன். பேக்கப் சொன்னதும் டாட்டா பாய்பாய்ன்னு சொல்லிடுவேன். அந்த நட்பை வீடு வரை கொண்டு செல்ல மாட்டேன்.

இதில் பிரியமானவள் மற்றும் காற்றின் மொழி சீரியல் மட்டும் ஒரு குடும்பமா பழகிட்டோம். அங்க எல்லாரும் ஒன்னாதான் உட்கார்ந்து சாப்பிடுவோம். சில சமயம் வெளியே ஆர்டர் செய்தும் சாப்பிடுவோம். எல்லாரும் சேர்ந்து வெளியே போவோம். அப்படித்தான் கொடைக்கானல் டிரிப் பிளான் செய்தோம். இரண்டாம் ஞாயிறு விடுமுறை என்பதால் ஒரு நாள் டிரிப் போலாம்னு திட்டமிட்டோம். அப்ப திடீர்னு கொடைக்கானல் போகலாம்னு சொன்னதும், எல்லாரும் போகலாம்னு மறுநாளே கிளம்பிட்டோம்.

அந்த டிரிப் மறக்கவே முடியாது. ஒரு நாள் முழுக்க தங்குவதற்காக கொடைக்கானல் முழுக்க அலைந்தோம். இங்க இருந்து கிளம்பும் போதே ரெசார்ட் புக் செய்திருந்தோம். அங்க போன பிறகு அங்க தங்க வசதியா இருக்கான்னு தெரிந்தது. அதனால் வேற இடத்தில் தங்க முடிவு செய்தோம். ஒரு நாள் முழுக்க கொடைக்கானலை சுற்றிப் பார்த்துக் கொண்டே தங்க இடம் தேடி அலைந்தோம்.

அன்று முழுதும் பெட்டி படுக்கையோட காரில் சுற்றிக் கொண்டு இருந்தோம். கடைசியா ஒரு ரெசார்ட் கிடைச்சது. மலை மேல. மேகங்கள் எல்லாம் எங்க மேல அப்படியே தவழ்ந்து போகும். காலை எழுந்தவுடன் பார்த்தா மலையே தெரியாது. மேகம் முழுசா மறைச்சி இருக்கும். போகப்போக மேகங்கள் நகர்ந்து அந்த மலைகளை பார்க்கும் போது அவ்வளவு அழகா இருக்கும். அந்த இரண்டு நாள் நாங்க ரொம்பவே என்ஜாய் செய்தோம். தினமும் ஷூட்டிங்,மேக்கப்பில் இருந்து ஒரு சின்ன பிரேக் என்றாலும் அந்த நினைவுகள் எப்போதும் பசுமையாக மனசு முழுக்க நிறைஞ்சிருக்கும்.

ஸ்கூலில் படிக்கும் போது நாங்க ஒரு கேங்கா இருப்பாம். ஒருத்தர் தப்பு செய்தாலும் எல்லாரையும் மாட்டிவிட்டுடுவோம். பெண்களுக்கான பள்ளிக்கூடம் என்பதால் பள்ளியில் இன்டர் ஸ்கூல் காம்படீஷன் நடக்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கும். எல்லா ஸ்கூலில் இருந்தும் பசங்க பொண்ணுங்கன்னு வருவாங்க. நாங்க பங்கு பெறலைன்னாலும், வேடிக்கை பார்க்க போவோம். எங்க ஸ்கூலில் பாய்ஸ் கிடையாது என்பதால், நாங்க கொஞ்சம் ரக்ெகட்டாதான் இருப்போம். 5ம் வகுப்பு வரைதான் பசங்க இருப்பாங்க. சின்ன பசங்களே எங்கள பாத்து பயப்படுவாங்க. அவங்கள கேன்டீனில் ரிங் சிப்ஸ், கார்ன் பப்ஸ் வாங்கி வரச் சொல்லி ரேக் செய்வோம். அன்று முதல் நானும் பவித்ராவும் ரொம்ப க்ளோஸ். அவ 10ம் வகுப்பு வரைதான் எங்களுடன் படிச்சா. இருந்தாலும் இன்று வரை அவளுடனான நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கு.

ஸ்கூல், சீரியல் தாண்டி வீட்டில் என் தங்கை. அவ எனக்கு நேர் எதிர். நான் சுத்திட்டே இருப்பேன். அவ ெராம்ப சைலன்ட். கல்லூரி முடிஞ்சா வீடுன்னு இருப்பா. நான் தான் அவள வற்புறுத்தி வெளியே கூட்டிக் கொண்டு போவேன். மால், தியேட்டர், விதவிதமான உணவுகள்னு நானும் அவளும் சேர்ந்து சுத்துவோம்.

இப்ப இரண்டு சீரியலில் நடிக்கிறேன். சினிமா வாய்ப்பு வந்தா நடிப்பேன். காரணம், சீரியல் பொறுத்தவரை எப்போதும் மக்கள் மனதில் நாம நிலைத்து இருப்போம். சினிமா அப்படி இல்லை. இரண்டு படம் வாய்ப்பு வந்தா, மூன்றாவது வாய்ப்பு வரும்ன்னு சொல்ல முடியாது. அதற்குள் மக்களும் என்னை மறந்திடுவாங்க. இப்ப இரண்டு சீரியலில் நடிக்கிறேன். வேற சீரியலில் நடிக்க வாய்ப்பு வருது. என்னால் தான் நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் இது முடிந்ததும் பார்க்கலாம்னு இருக்கேன். எதிர்கால திட்டம் வாயில்லா ஜீவன்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஒரு இருப்பிடத்தை என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் அமைத்து தரணும் என்பதுதான் என் ஆசை’’ என்றார் சாந்தினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களே…மனம் தளர வேண்டாம்!(அவ்வப்போது கிளாமர்)
Next post வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)