கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:10 Minute, 26 Second

பாலியல் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்ள, முதலில் நம்முடைய உடலின் தன்மை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தில் ஆண், பெண், திருநங்கைகள் உடலின் அமைப்பு பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வோம்…

ஆண், பெண் உடல் பற்றி அறிவியல் பாடத்தில் உள்ளது. அவர்களின் இனப்பெருக்கம் குறித்த விஷயங்கள் எல்லாமே வளர் இளம் பருவத்தை எட்டும் போது தெரிந்து கொள்ளும் விதமாக அறிவியல் பாடங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு பாலர் பள்ளி, இருபாலர் பள்ளி என்ற வித்தியாசம் இன்றி இந்தப் பாடங்கள் நடத்தப்படாமல் கடக்கப்படுகின்றன.

அறிவியல் உண்மையை தெரிந்து கொள்வதற்கு எதற்கு இத்தனை வெட்கம்?!

வளர் இளம் பருவத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை மறைக்கப்படுவதால் ஆண், பெண் புரிதல் இன்றியே ஒரு தலைமுறை வளர்க்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் தங்களை ஏமாற்றிக் கொள்ளவும், மற்றவரை பாலியல் அடிமையாக்கவும் இது போன்ற வெட்கங்கள் விதையாகி விடுகிறது.

‘‘உயிர் உருவாகும் விதி, XX குரோமோசோம்கள் இணைந்து பெண்ணாகவும், XY குரோமோசோம்கள் இணைந்து ஆணாகவும் கருவில் உருப்பெறுகிறது.பெண்ணுடலில் உள்ள கருமுட்டையோடு மோதி அதனுடன் இணையும் ஆண் விந்தணுவின் குரோமோசோம் கருவில் வளரப் போவது ஆணா, பெண்ணா என தீர்மானிக்கிறது. சில சமயங்களில் அந்தக் கரு இடைப்பட்ட பாலினமாக உருவாகுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எதுவாகினும் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆணின் குரோமோசோம்தான். பெண்ணுடல் எப்போதும் X குரோமோசோமை மட்டுமே கொண்டிருக்கிறது. கருவறையில் ஒரு முட்டை போல அந்தக் கரு படிப்படியாக உருப்பெறுகிறது. உள்ளுறுப்புகள் உருவாகி பின் வளர்ச்சி அடைகிறது. 7 முதல் 16 வாரங்களுக்குள்தான் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

முட்டையின் வயிற்றுப் பகுதிக்கும் கீழ் ஒரு விதையின் முளைப்பைப் போல பிறப்புறுப்பு வெளிப்படுகிறது. ஆணாக இருப்பின் அந்தப் பகுதியில் ஆணுறுப்பு வெளியில் தண்டு போல சிறிதாக வளரத் துவங்கும். அதே பெண்ணாக இருப்பின் அந்த மொட்டு உள்வாங்கி பெண்ணுறுப்பாக வளர்ச்சி அடையும். எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் இணைந்திருந்தாலும் கூட சில சமயங்களில் முழுமையாக ஆணுறுப்பு வெளிப்படாமல் சிறிய மொட்டாக இருக்கும். பார்ப்பதற்கு ஆணாக வளர்ந்தாலும் அவர்கள் பெண்ணாக இருப்பார்கள்.

அவர்களின் ஆணுறுப்பு பெரிதாக வளர்ந்திருக்காது. பருவம் அடையும் வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்ணுக்கான உணர்வுகளை மேம்படச் செய்கிறது. வளர்ந்த பின் அவர்கள் பெண்ணாக மாற விரும்பும் போது ஆணுறுப்பை இரண்டாகப் பிளந்து அதை இருபுறமும் சுருட்டி பெண்ணுறுப்பு போல தைத்து விடுகின்றனர்.

இவையே பெண்ணுறுப்பில் உள்ள உதடுகள் போல மாறிடும். ஆணுறுப்பில் ஆர்கசம் என்னும் உணர்வை வெளிப்படுத்தும் கிளிட்டோரியஸ் எனும் அந்த மொட்டு பெண்ணுறுப்பில் இருப்பது போல தைத்து விடுவார்கள். ஆணுக்கு இப்படி அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்படும் பிறப்புறுப்பில் சிறுநீர் கழிப்பதற்கான வழி மட்டுமே இருக்கும்.

பெண்ணுறுப்பில் சிறுநீர் கழிக்கவும், கருவறையில் இருந்து மாதவிடாய் வெளியேற வேறொரு வழியும் இருக்கும். மூன்றாம் பாலினத்தவர்கள் திருநங்கைகளுக்கு பெண்ணுறுப்பாக மாற்றப்பட்டாலும் சிறுநீர் வெளியேறுவதற்கான ஒரு வழி மட்டுமே இருக்கும்.

ஒரு குழந்தை எந்தப் பாலினம் என்பது கருவில் தீர்மானிக்கிற விஷயம். அதற்கு முழு முதல் காரணம் ஆண். ஆண் உறுப்பானது வெளியில் தள்ளி முந்தி வருவதால் ஆண் எதையும் வெளியில் சொல்லவே விரும்புகிறான்.

தனது திறமை வீரம் போன்றவற்றை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆணுக்கு அதிகமாக இருக்கும். பெண்ணுறுப்பு உள்வாங்கியிருப்பதால் அவள் தன்னைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வதை விரும்புவதில்லை. மனதில் நினைக்கும் விஷயங்களைக் கூட வெளியில் சொல்லத் தயங்குகின்றனர். இதுவே பாலின்பம் சார்ந்து தான் உச்ச நிலையை அடைகிறேனா இல்லையா என்பதைக் கூட அவள் வெளிப்படுத்தத் தயங்குகிறாள்.

குழந்தை பிறந்த பின் ஆண் குழந்தைகளுக்கு மார்பக காம்புகள் பெரிதாகக் கூடாது என்பதற்காக குளிக்க வைக்கும் போது மார்புக் காம்புகளை பீய்ச்சி விடுவது வழக்கம். அதில் உள்ள பால் வெளியேறிவிடும்.

பின் ஆணின் மார்புக் காம்புகள் பெரிதாகாது. ஒரு சில ஆண்களுக்கு மார்பகங்கள் கொஞ்சம் பெரிதாகத் தோன்றினாலும் அதிலிருந்து பால் வராது. ஆண் உடலில் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் ஆதிக்கம் செலுத்துகிறது. பெண்ணுடலில் ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆணின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பெண்ணுக்குள்ளும் குறிப்பிட்ட சதவீதம் இருக்கும். இது அவளுக்கு வலிமை அளிக்கிறது. ஆண்களின் இனப் பெருக்க உறுப்பு அவர்களின் சிறுநீர் கழிக்கும் உறுப்பாகவும் உள்ளது. ஆணின் மனம் செக்ஸ் உணர்வால் தூண்டப்படும்போது ஆண் உறுப்பினுள் ரத்தம் நிறைகிறது. அதனால் ஆணுறுப்பில் விறைப்புத் தன்மை உருவாகிறது. விறைப்புத் தன்மை அற்ற நிலையில் ப்ளாசிட் என ஆணுறுப்பு அழைக்கப்படுகிறது.

ஆண் பூப்படைவது என்பது ஆணுறுப்பில் இருந்து விந்துக் கசிவு ஏற்படுவதே. சராசரியாக ஆண் பருவம் அடைவது 12 வயதில் என்று கூறப்படுகிறது. 9 வயதில் இருந்து 18 வயதுக்குள் ஆண் இன்னொரு உயிரை உருவாக்கும் நிலைக்கு முழுமை அடைகிறான். ஆண் பருவம் அடையும்போது டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் விதைப்பையில் உயிரணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

பெண் பருவம் அடைவது மாதவிடாய் மூலம் வெளிப்படுகிறது. அந்த சமயத்தில் பெண்ணின் மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் அதன் அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டுகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பி இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. Follicle stimulating hormone, Luteinizing stimulating hormone என்கிற இந்த இரண்டு ஹார்மோன்களும் இணைந்துதான் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் செக்ஸ் உணர்வுக்கும் காரணமாக அமைகிறது. இவற்றுடன் புரொஜெஸ்ட்ரான், ஆக்ஸிடோசின் இரண்டும் இணைந்து மாதவிடாய் சுழற்சிக்கு
காரணம் ஆகிறது.

இந்த ஹார்மோன்கள் பெண்ணின் 10 வயதில் இருந்து 14 வயது வரை பெண் பூப்படைவதற்கான பணிகளைச் செய்கிறது. மாதவிடாய் துவங்கியிருந்தாலும் பெண்ணின் கரு முட்டை உடனே உயிராக மாறும் தரத்துடன் இருக்காது. அதற்கு குறிப்பிட்ட காலம் பிடிக்கும். பெண்ணின் பிறப்புறுப்பை உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். பெண்ணுறுப்பின் உட்புறத்தில் ஓவரீஸ் எனப்
படும் கருப்பை (முட்டைப் பை) உள்ளது.

ஃபெலோப்பியன் டியூப், குழந்தையை சுமக்கும் கர்ப்பப்பை யூட்ரஸ், யோனி என்று நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஆண், பெண் இருவரும் வளர்ந்து அவர்கள் இனப்பெருக்கத்துக்கு தகுதி அடையும்போது உயிர் உற்பத்திக்கான தேவையே இருபாலினத்தவருக்கும் மற்றவர் மீதான ஈர்ப்பு விசையாக தொடங்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…! (அவ்வப்போது கிளாமர்)
Next post இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)