பாலூட்டும் தாய்மார்கள்!! (மருத்துவம்)

Read Time:15 Minute, 45 Second

குழந்தைக்கு பாலூட்டுவதால் அம்மாவின் அழகு கெட்டுப் போய்விடும் என்பது கட்டுக்கதை. உண்மையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏராளமான நன்மைகள்  நடக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்:குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் (First hour Breastfeeding) அளிப்பது மிக மிக அவசியமாகும். தாயின் முதல் பால், குழந்தைகளுக்கு சிறந்த நோய்த் தடுப்பு மருந்தாகும். குழந்தைகளைத் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.குழந்தை பிறந்த முதல் 6 மாதத்துக்கு தாய்ப்பால் மட்டும்தான் தரவேண்டும்.

குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்கு ஒருமுறை பால் ஊட்ட வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும்.குழந்தை எவ்வளவு நேரம் பால் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம்.மாலையிலும் இரவிலும் தாய்க்கு பால் ஊறுவது அதிகமாக நடைபெறும் என்பதால் இரவு நேரத்திலும் குழந்தைகளுக்கு கட்டாயமாக பால் ஊட்ட வேண்டும்.

தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான தண்ணீர் இருக்கிறது. அதனால் மற்ற உணவுகளைப் போலவே தண்ணீரும் குழந்தைக்கு 6 மாதங்கள் நிரம்பிய பிறகே தர வேண்டும். அதற்கு முன்னால் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவு தந்தாலும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம். நோய் தொற்றுக்கும் குழந்தை ஆளாகலாம். முடிந்தளவு பாட்டிலில் பால் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பாட்டிலில் உள்ள நிப்பிளில் எளிதில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகலாம்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை எடுத்து, அறை வெப்பத்தில் 6-8 மணி நேரம் வைக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது அதன் குளிர் தன்மை நீங்கிய பின் குழந்தைக்கு தர வேண்டும்.இப்படி வைக்கப்பட்ட தாய்ப்பாலை வேலை காரணமாக தாய் வெளியில் இருக்கும்போது குழந்தைக்கு புகட்ட முடியும். வேலைக்கு நடுவில் பால் ஊட்ட வசதியான ஏற்பாடுகளை தாய்மார்கள் அவசியம் செய்து கொள்ளவேண்டும்.

குழந்தை ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ அல்லது 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என நாம் அறிந்து கொள்ளலாம்.

தாய்ப்பால் ஊட்டுவது இயற்கை கருத்தடையாக செயல்படுகிறது. உடல்எடை குறையச் செய்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மாரடைப்பு வருவதற்கான அபாயம் குறைகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழத்தில் ஐம்பத்தி ஆறாயிரம் தாய்மார்களிடம் மேற்கொண்ட ஆய்வில் தாய்ப்பால் ஊட்டாத 8900 பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருந்ததையும், தாய்ப்பால் ஊட்டிய தாய்மார்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படாததையும் கண்டறிந்துள்ளனர்.

– எம்.நிர்மலா

தவிர்க்க வேண்டியவை

*அம்மாவுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அது குழந்தைக்கும் பாதிப்பை உண்டு பண்ணலாம். எனவே ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

*தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் அதிலுள்ள தியோபுரோமைன் குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். பித்த தொந்தரவை உண்டு பண்ணும். தூக்கத்தைப் பாதிக்கும்.

*அதிகமாக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபியில் உள்ள காஃபின் குழந்தைக்கு செரியாமை, தூக்கமின்மை முதலான பிரச்னையை உண்டு பண்ணும். குழந்தையின் ஹீமோகுளோபின் அளவை குறைக்கும். எனவே அதிக காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். பாதரசம் நிறைந்த மீன்கள் தவிர்க்க வேண்டும்.

*வைட்டமின் சி நிறைந்த பழங்கள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அமில கூறுகல் இரைப்பை குழாய் முதிர்ச்சியடையாத குழந்தையின் வயிற்றை எரிச்சலடையச் செய்யும். மலச்சிக்கல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

*வேர்க்கடலை ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, பாலூட்டும் தாய்மார்கள் வேர்க்கடலையை தவிர்ப்பது நல்லது. வேர்க்கடலையில் உள்ள ஒவ்வாமை குழந்தைக்கு மூச்சுத் திணறல், சருமத் தடிப்புகள் போன்ற பிரச்னைகளை உண்டாக்கலாம். கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும் பாலில் ஒவ்வாமையை உண்டாக்கும். எனவே,
முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

*தாய்ப்பால் குடித்த குழந்தைகள், அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட நன்றாக செயல்படுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

*தாய்ப்பாலைத் தொடர்ந்து குடிக்கும் குழந்தைகளுக்கு தொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

*முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு 2 வயது வரை காதுகளில் தொற்று வரும் வாய்ப்பை 43% குறைக்கிறதாம்.

*குழந்தை பிறந்த முதல் மூன்று மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர்களை உடன் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆஸ்துமாவை விரட்டும் ஆடாதொடை!! (மருத்துவம்)
Next post சிறுகதை-ஓய்வு!! (மகளிர் பக்கம்)