தயிரில் இதெல்லாம் செய்யலாமே…!! (மகளிர் பக்கம்)
* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
* தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகி விடும்.
* தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
* பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால் தான் ஜீரணமாகி இருக்கும். ஆனால் தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
* பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய்க்கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
* தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
* பாலில் LACTO இருக்கிறது. தயிரில் LACTOBACIL இருக்கிறது. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
* வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்ெகாள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
* அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் அடங்கும்.
* பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும் பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.
* மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
* புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
*தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
* வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.