கூந்தலை போஷாக்காக பராமரிக்கும் நெல்லிக்காய்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 59 Second

கூந்தல் அழகு பெண்களின் மகத்துவம். அதை நீண்டு வளர பல்வேறு வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாகக்கூடிய நன்மைகளை நெல்லிக்காய் செய்யும். உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக் காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புதப் பொருள் இது. நீங்கள் நன்கு அறிந்த நெல்லிக்கனி தான் உங்கள் கூந்தலுக்கு எண்ணற்ற விதங்களில் உதவி செய்யக்கூடியதாக இருக்கிறது. தலைமுடி உதிர்வதை தடுப்பது முதல் பொடுகை போக்குவது வரை பலவிதங்களில் நெல்லிக்காய் நன்மை செய்கிறது.

நெல்லிக்கனி ஹேர் டானிக்!

உங்கள் மயிர்க்கால்களில் நெல்லிக்காய் சாறை பயன்படுத்துவது தலைமுடியில் கொலாஜன் அளவை அதிகமாக்கி தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்
தலையை ஐந்து நிமிடம் மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் பத்து நிமிஷங்கள் கழித்து மிதமான ஷாம்பு கொண்டு மிதமான சூட்டில் உள்ள நீரில் அலசிக் கொள்ளவும்.

நெல்லிக்காய் யோகர்ட் மாஸ்க்!

தலைமுடியை வலுவாக்கும் மாஸ்க்கான நெல்லிக்கனி யோகட் மாஸ்க் உங்கள் கூந்தலில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்தக்கூடியது. இரண்டு ஸ்பூன் நெல்லி பொடியை எடுத்துக் கொண்டு அதில் சூடான நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இதில் ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கூந்தலில் பூசிக்கொள்ள வேண்டும். 30 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்னர் இதமான சுடுதண்ணீரில் அலச வேண்டும்.

நெல்லிக்காய் எண்ணெய்!

உங்கள் உச்சந்தலையை நெல்லிக்கனி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடி வலுவாகி முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். இதனால் உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து தலைமுடி வளர்ச்சி அதிகமாகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மை உச்சந்தலையில் பொடுகினால் ஏற்படும் அரிப்பை போக்குகிறது. இந்த நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தும் முன் சிறிது சூடாக்கி வாரம் ஒரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்..

நெல்லிக்காய் ஹேர் வாஷ்!

இப்போது பெரும்பாலான பெண்களுக்கு இளநரை முடி தோன்றுவது சகஜமான பிரச்னையாக இருக்கிறது. தலைமுடி நரைப்பதை சீராக்கி மங்கலான கூந்தலை பளபளக்க வைக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு இருக்கிறது. நெல்லிக்காய் துண்டு மற்றும் அதன் சாற்றை எடுத்துக்கொண்டு தண்ணீரில் கலந்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை குளிர வைத்து நன்கு வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த கலவையில் கூந்தலை அலச வேண்டும். இந்த வழிகளை பின்பற்றினால் நீண்ட கருகருவென கூந்தல் வளர்ச்சி ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குங்குமப்பூ!! (மகளிர் பக்கம்)
Next post ஜவ்வரிசியின் நன்மைகள்!! (மருத்துவம்)