நகைப் பெட்டிக்குள் இனிப்பு வகைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 56 Second

கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளே மக்களை கவர்கின்றன. அதுதான் வியாபார யுக்தியும் கூட. பெரிய பெரிய கடைகள் மக்களிடம் பொருட்களை விற்க பல்வேறு விளம்பரங்களை செய்து வரும் நிலையில் சேலத்தில் உள்ள ஒரு இனிப்பு கடை ஒன்று நகைப்பெட்டி போல வடிவமைத்து அதில் இனிப்பு மற்றும் கார வகைகளை பேக் செய்து கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

சாதாரண பெட்டிகளில் பேக் செய்யப்படும் பெட்டிகளை விட இந்த நகைப்பெட்டி உள்ள பெட்டிகளில் பேக் செய்து விற்பனை செய்வதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். ‘‘எங்க கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நாங்க கடைகளில் உள்ள நிறை குறைகளை பற்றி கேட்பது வழக்கம். அவர்களின் ஆலோசனைப்படி சின்னச் சின்ன மாற்றங்களை செய்தும் இருக்கிறோம். அதன் அடிப்படையில் தோன்றியதுதான் இந்த நகைப்பெட்டி ஐடியா’’ என்றார் குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீதர்.

‘‘சேலத்தில் 1994ம் ஆண்டு பிரமோத் அகர்வால், ராஜேஷ் அகர்வால் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஸ்ரீகுப்தா ஸ்வீட்ஸ் கடை. முதல் கிளையாக செவ்வாய்ப்பேட்டையில் தொடங்கினோம். அந்தக் காலக்கட்டத்தில் இங்கு அதிகமாக ஸ்வீட்ஸ் கடைகள் எல்லாம் கிடையாது. அதனால் மக்களும் எங்களுக்கு நிறைய ஆதரவு ெகாடுத்தார்கள். அதனால் அடுத்தடுத்து கிளைகளை துவங்கினோம். தற்போது சேலம் முழுதும் எங்க ஸ்வீட் கடையின் எட்டு கிளைகள் தொடங்கி சேலத்தின் முக்கிய முகமாக நாங்க மாறியுள்ளோம்.

எங்க கடையில் 140 வகையான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மற்ற கடைகளை விட எங்களுடையது தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக உருவானதுதான் இந்த நகைப்பெட்டி வடிவத்தில் இனிப்புகள் வைக்கும் பெட்டி. விலை மிகுந்த பொருட்களான தங்கம், வைரம் நகைகளை பாதுகாப்பாக வைக்கவே இந்த மாதிரியான பெட்டிகளை பயன்படுத்துவார்கள். இந்த மாதிரியான பெட்டிகள் உள்ளே இருக்கும் பொருளை எவ்வித சேதாரம் இன்றி பாதுகாக்கும்.

இனிப்பு வகைகளும் அப்படித்தான். மிகவும் மிருதுவானவை. அதனால் அதனை மிகவும் கவனமாக பேக் செய்ய வேண்டும். பொதுவாகவே இனிப்பு கடைகளில் இனிப்புகளை சாதாரண அட்டைப் பெட்டியில் தான் போட்டு தருவார்கள். வேறு ஊருக்கு செல்பவர்கள் சாதாரண அட்டைப்பெட்டியில் இருக்கும் ஸ்வீட் பாக்ஸினை பைக்குள் வைத்து எடுத்து செல்லும் போது அவை நசுங்கி இனிப்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உடையும். இதை தவிர்க்கவே இந்த மாதிரி நகைப்பெட்டிகள் வடிவத்தில் ஸ்வீட் பாக்ஸினை கொடுக்க முடிவு செய்தோம்.

பெட்டிகள் உறுதியாகவும் அதே சமயம் பெட்டியின் மேல் வண்ணங்கள் மற்றும் ஓவியங்களை கொண்டு டிசைன் செய்தோம். அவை பார்க்கவே பிரகாசமாக அழகாக இருந்தது. கடைக்கு வரும் பொதுமக்கள் மட்டுமில்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களும் எங்க இனிப்புகளை மொத்தமாக வாங்கி அவர்களுடைய தொழிலாளர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு பரிசாக கொடுக்கப்படும் பெட்டிகளில் மட்டும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை அச்சிட்டு தர ஆரம்பித்தோம்.

எங்க கடையின் பெயருடன் அந்த நிறுவனத்தின் பெயரும் சேர்ந்து இருக்கும். இதனால் எங்களுக்கும் அந்த நிறுவனங்களுக்குமான உறவு மேம்பட்டு நல்ல ஒரு தொழில் உறவு ஏற்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைச்சது. நகைப்பெட்டி வடிவங்களையும் ஒரு கிலோ அரை கிலோ என மக்கள் ஸ்வீட் வாங்கும் எடையின் அளவிற்கு ஏற்ப தயாரித்தோம். தற்போது இதே நகைப்பெட்டிகளில் நட்ஸ் கொண்ட கிஃப்ட் பாக்ஸ்களையும் தயாரித்து அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை போட்டுத் தருகிறோம். விற்கும் பொருள் மட்டும் தரமாக இல்லாமல், அதனை பேக்கிங் செய்யப்படும் அட்டைகளும் பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்ேபாதுதான் மக்களுக்கு மீண்டும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்’’ என்கிறார் ஸ்ரீதர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடியற்காலை சுடச்சுட தயாராகும் காஞ்சிபுர இட்லி! (மகளிர் பக்கம்)
Next post பாதங்களில் பித்த வெடிப்பு…!! (மருத்துவம்)