ஊர்காவல் படையைச் சேர்ந்தவரால் இருவர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 15 Second

அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப் பட்டுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் குறிப்பிட்ட ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் மாமியாரும் மைத்துனியும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இச்சம்பவத் தையடுத்து தனது மனைவியையும் சுட்டுக் கொல்ல அவர் முயன்ற போதிலும் மனைவி காயங்களுடன் உயிர் தப்பினார். அதனைத் தொடர்ந்து தன்னையும் சுட்டுக் கொன்று தற்கொலை செய்வதற்கு அவர் முற்பட்ட போதிலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரும் அவரது மனைவியும் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு குடும்ப தகராறே காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாறை நவகிரி குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்..
Next post பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை; பிரான்ஸ் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் கைது.