மட்டக்களப்பு மாணவி தினுஷிவின் படுகொலை சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை

Read Time:2 Minute, 11 Second

மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது மாணவி தினுஷிவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர் மூவர் நேற்று திங்கட்கிழமை மாலை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர் காவல்துறையினர் மீது சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற வேளையில் காவல்துறையினரால் மேற்கொண்ட பதில் துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்;. கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் பாடசாலைப் புத்தகப்பையை காட்டுவதாக சந்தேக நபர்கள் மூவரும் கூறியதையடுத்து மேலதிக விசாரணைகளுக்கென இடம் ஒன்றுக்கு காவல்துறையினர் அவர்களை அழைத்துக் சென்றுள்ளனர் இதனையடுத்த அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த டி56 ரக துப்பாக்கியால் சந்தேக நபர்கள் திடீரென காவல்துறையினரை சுட முனைந்ததாக ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளாh.; இந்த மாணவி முப்பது இலட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த 28 திகதி மட்டக்கிளப்பில் வைத்து கடத்தப்பட்ட பின் பாழங்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் இதற்கு முன்னர் திருகோணமலையிலும் கடத்தப்பட்டு கப்பம் கோரிய நிலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வர்ஷாவின் கொலைச் சந்தேகநபர்களும் இதேபாணியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “மட்டக்களப்பு மாணவி தினுஷிவின் படுகொலை சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை

  1. kelaken utham ethuthaana??thorake karuna thaan porupu
    vaalga piliyaan

Leave a Reply

Previous post முதியவர்களை பாடசாலையில் வைத்து பராமரிக்கும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகம்..
Next post வன்னியில் மோதலில் பலியானவர்களில் விவரங்களை ஜ.நா பகிரங்கப்படுத்தவில்லை கொழும்பிலுள்ள தூதரகம் மறுப்பு