காட்டுயானை தாக்கி வாழைச்சேனையில் இருவர் பலி

Read Time:1 Minute, 16 Second

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிடச்சிமடு வயற்பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் இரு விவசாயிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள் இன்று அதிகாலை 1.00மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த நாகூர்தம்பி நஜீம் (வயது39) மற்றும் மீராவோடையை சேர்ந்த முஹம்மது காசிம் காதர் முகைதீன் வயது38 ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட இருவர் உட்பட மூன்றுபேர் வயல்வாடியில் காவல் கடமையின் நிமிர்த்தம் தங்கியிருந்ததாகவும் குடிசையில் உறக்கத்தில் இருந்தவேளை அங்கு வந்த காட்டு யானையொன்று இவர்களை மிதித்து கொன்றதாகவும் சம்பவத்தில் உயிர்தப்பியவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பு வலயத்தின் எஞ்சிய பகுதிகளை நோக்கி படையினர் முன்னேற்றம்… இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு!!
Next post தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சுட்டுக்கொலை!! (PART-2)