இலங்கை குறித்து ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் -சர்வதேச அமைப்புக்கள் வேண்டுகோள்

Read Time:2 Minute, 21 Second

இலங்கையில் மோதல் காரணமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலவரம் தொடர்பில் ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என பிரபலமான சர்வதேச அமைப்புக்கள் நான்கு ஜப்பானிய பிரதமர் டாரோ அசோவிற்கு அனுப்பிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பாக அவதானித்துவரும் சர்வதேச அமைப்புகளுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் சர்வதேச நெருக்கடிகள் குழு சர்வதேச மன்னிப்புச்சபை பாதுகாப்பிற்கு பொறுப்பான உலகலாவிய மையம் ஆகியன இணைந்தே ஜப்பானிய பிரதமரிற்கு கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளன. மனிதாபிமான விடயத்தில் முக்கிய பங்கு வகிப்பதும் இலங்கைக்கு பிரதான நிதியுதவி வழங்கும் நாடான ஜப்பானிற்கு இலங்கை மக்களை பாதுகாப்பதிற்கும் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்துவதில் முக்கிய பங்கு உண்டு என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நிலவும் யுத்த்ததினால் அதிகளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதுசர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல் எனவும் இதுவரையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் இதுதொடர்பில் ஒழுங்காக ஆராயப்படவில்லை எனவும் எதிர்வரும் கூட்டத்தொடரில் இலங்கை நிலவரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தகுற்றத்தில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் -மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்
Next post முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது எறிகணை தாக்குதல் 26 பேர் ஸ்தலத்தில் பலி பலர் படுகாயம் -ஆனந்தசங்கரி!