பிரபாகரன் மனைவி, மகள், இளைய மகன் கொலையா?

Read Time:3 Minute, 1 Second

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் கூறியதாக செய்திகள் வருகின்றன. அவர்கள் ஒரு வாகனத்தில் தப்பியபோது ராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது பிரபாகரன் குடும்பத்தின் பாதுகாவலர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் வாகனத்தில் இருந்த அனைவருமே கொல்லப்பட்டனர். பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நந்திக்கடல் பகுதியிலேயே இந்தச் சண்டை நடந்ததாகவும் அவர்களும் அங்கேயே கொல்லப்பட்டாகவும் என்று ராணுவம் கூறியதாக இந்திய தனியார் தொலைக்காட்சி தெரிவிக்கிறது. ஆனால், அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தச் செய்தியை வேறு சர்வதேச செய்தி நிறுவனங்கள் இரவு வரை உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக பிரபாகரன் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பெரிதும் நம்பப்பட்டது. பிரபாகரனின் மகள் துவாரகா நீண்ட காலத்திற்கு முன்பே லண்டனுக்குப் போய் விட்டதாகக் கூறப்பட்டது. அதேசமயம், மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி, மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பிரபாகரனுடனேயே இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை- பார்வதி ஆகியோர் என்ன ஆயினர் என்று தெரியவில்லை. அவர்களும் பிரபாகரனுடன் தான் வசித்து வந்தனர். இதற்கிடையே, மேலும் 7 புலிகள் இயக்கத் தலைவர்களின் உடல்களை அடையாளம் கண்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கடற்படைப் பிரிவு தலைவர் சூசை, கடற்புலிகள் பிரிவு முக்கிய தலைவர் ரங்கன், உளவுத்துறை மூத்த தலைவர் வெற்றி, உளவுப் பிரிவு முக்கிய தலைவர் ராம் குமார், பெண் உளவுப் பிரிவு முக்கிய தலைவர் மணிமேகலை என்கிற கோமளி, மட்டக்களப்பு அரசியல் பிரிவு தலைவர் அண்ணாதுரை, மூத்த உளவுப் பிரிவு தலைவர் வினோதன் ஆகியோரே அவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பிரபாகரன் மனைவி, மகள், இளைய மகன் கொலையா?

  1. தலைவர் குடும்பத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார் அண்டு தானே முன்னர் புலம்பினீர்கள்…

    இது உண்மையாயின்…. பிரபகாரன் ஒரு மாவீரன் தான்…. தலை வணங்க தான் வேண்டும்.

Leave a Reply

Previous post Sri Lanka Rupavahini Daya master & Karuna Idetifide Prabha 19 05 00
Next post பிரபாகரன் மறைந்தது வருத்தம் தான்!!! -கூறுகிறார் கருணா