இராணுவமும், விடுதலைப் புலிகளும் கனரக ஆயுதங்களைப் பயன்டுத்தியுள்ளனர்..

Read Time:3 Minute, 20 Second

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதும், இரண்டு தரப்பபும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்திருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 81 மில்லி மீற்றர் மற்றும் 82 மில்லி மீற்றர் மோட்டார் ஷெல்கள், ஆட்லறிகள் உட்பட இரண்டு தரப்பும் சமபலம் கொண்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும், இரு தரப்பும் பெருமளவான ஆயுதங்களைப் பயன்படுத்தியே மோதல்களில் ஈடுபட்டுள்ளன என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாத் தீர்மானம் குறித்துக் குறைந்தளவு கவனமே செலுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அந்த ஊடகம், இடம்பெயர்ந்த மக்கள் மோதல்களால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது 1949 ஜெனீவாத் தீர்மானத்தின் 15 சரத்தின் இரண்டாவது பிரிவு கூறுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது. வான் தாக்குதல்கள் மற்றும் றொக்கட் தாக்குதல்களை நடத்தும்போது அந்தக் குண்டுகள் தரையை நெருங்கும்போது அவற்றின் தாக்கம் குறைந்ததாக இருக்கவேண்டுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலம் மென்மையானதாகக் காணப்படுமாயின் அதன் தாக்கம் அதிகமாகவிருக்குமெனவும் கூறப்படுகிறது. இலங்கையில் மோதல்கள் நடைபெற்ற பகுதிகளின் புகைப்படங்களைப் பார்வையிட்ட பிரித்தானிய இராச்சியத்தின் இராணுவம் எனும் பத்திரிகையின் ஆசிரிய சார்ள்ஸ் ஹேய்மன், இலங்கையில் வான்ரீதியான குண்டுத் தாக்குதல்கள் நடந்திருப்பதாகக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கடத்துவதற்கு 11 வர்த்தகக் கப்பல்களைப் பயன்படுத்தியிருப்பதாக ஜோன்ஸ் பாதுகாப்புச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் பல்கேரியா, உக்ரேய்ன், சைப்பிரஸ், தாய்லாந்து, குரேசியா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கை அரசாங்கப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடைத்தங்கல் முகாமில் பொன்தியாகம்!..; மக்கள் தர்மஅடி..!!!
Next post சிங்கள ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுள்ளனர்: பொலிஸ்மா அதிபர்