யாழ். அருட்தந்தை ஒருவர் காணாமற் போனதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் முறைப்பாடு
யாழ். மறை மாவட்ட அருட்தந்தை ஒருவர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குழுமங்கால் மல்லாகத்தைச் சேர்ந்த 70வயதான பிரான்சிஸ் ஜோசெப் என்கிற அருட்தந்தையே காணாமற் போயுள்ளார். இவர் புதின பற்றீரிசியா கல்லூரியின் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். யாழ். மறை மாவட்டத்தின் சமூகத்தொடர்பு சாதனங்களுக்கு தலைவராக கடமையாற்றி 95ம் ஆண்டு இடம்பெயர்வின்போது வன்னி மாவட்டத்தில் பணியாற்றி வந்தவர். வன்னியின் கிளிநொச்சி அப்பாள்குளப் பகுதியில் பணியாற்றி இறுதிக்கட்டப் போர் நடவடிக்கையின்போது புதுமாந்தளன் பகுதியில் இருந்தபோது அவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை. வன்னியிலிருந்து சகல குழுக்களும் வெளியேறிய நிலையில் பிரான்சிஸ் ஜோசெப் அடிகள நிலை வெளியிடப்படவில்லை. இதுபற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ். ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
Average Rating