ஜனாதிபதியால் மாத்திரமே பொதுமன்னிப்பு வழங்க முடியும் -பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி

Read Time:2 Minute, 55 Second

இலங்கை சிறைச்சாலைகளில் பல மாதகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்ய ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்கிறார் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி இதுதொடர்பில் அவர் தொடர்ந்;தும் கூறுகையில் இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை நாமே அரசியல் கைதி என்கிறோம் அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகளாகவே நோக்குகிறது எனவே இவர்கள் தொடர்பில் உடனடியாக முடிவினை எடுப்பது சிரமமாக உள்ளது தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மகசின் சிறை மட்டக்களப்பு , திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் உட்பட சுமார் 2000 தமிழ் கைதிகள் தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு குற்றத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவே இவர்கள் அனைவரும் தனித்தனியே விசாரணை செய்யப்படவேண்டும் அப்படி செய்து அறிக்கை பெறப்படும் விடத்தே இதற்கான தீர்வினை பெறலாம் நாட்டில் குற்றங்களை தடுப்பது எப்படி என்ற நோக்கில் நாங்கள் ஒரு குழுவை உருவாக்கி உள்ளோம் இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர் கடந்த 10ம் திகதி இக்குழு கூடியபோது சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்கைதிகள் பற்றி அறிவித்தேன் மீண்டும் எதிர்வரும் மாதத்தின் முதலாம் வாரம் இக்குழு கூடும் அதன்போது கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை சமர்பிக்கவுள்ளேன் மேலும் தனிப்பட்ட முறையில் எமது அமைச்சினால் மட்டுமே எவ்வித முடிவையும் எடுக்கமுடியாது காரணம் கைதிகள் மீதான விசாரணைகளை மேற்கொண்டு இதுதொடர்பாக அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு நீதி அமைச்சுக்கு அறிவிக்கவேண்டும் அதன் பின்னரே நாம் அவர்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி
Next post முகாம்களில் இருந்து 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட் வழங்கியது