மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்ற திட்டம் -மங்கள சமரவீர

Read Time:3 Minute, 43 Second

தமிழ் மக்களுக்கு சொந்தமான மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன என்று ஸ்ரீறிலங்கா சுகந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள் சமரவீர பா.உ தெரிவித்தார். நலன்புரி முகாம்களில் 20 ஆயிரம் சந்தேகநபர் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் அப்பாவி மக்களைப் பழிவாங்குவது நியாயமற்றது. சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் நரகவேதனை குறித்து ஒவ்வொரு சிங்களவரும் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கொண்டவாறு தெரிவித்த மங்கள சமரவீர (பா.உ) மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டில் நடைபெற்ற மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பாக இன்று சர்வதேசமே பேசிக் கொண்டிருக்கின்றது வன்னித் தமிழ்மக்கள் அகதி முகாம்கள் என்ற பெயரில் சிறைக்கூடங்களிலும் நரக முகாம்களிலும் படும் துன்பதுயரங்கள் குறித்து நாம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றோம் இருந்தும் அது தொடர்பில் அரசின் பிரதிபலிப்புக்கள் எதனையும் காண முடியவில்லை. வன்னி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள 280000மக்களின் பெயர் விபரங்களை அரசு இன்னமும் வெளியிடவில்லை. பெற்றார் பிள்ளைகள் கணவன் மனைவி என குடும்பங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். வன்னித் தமிழர்களுக்குச் சொந்தமான 85 சதவீதமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் சூழ்ச்சித் திட்டத்தில் இறங்கியிருக்கும் அரசாங்கம் அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி வருகின்றது. வன்னி மக்களின் காணிகளின் உறுதிகளை அரசு பரிசீலித்து வருகின்றது. அத்துடன் மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக நம்பத தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தை தள்ளிப்போட்டு சிங்களவர்களை குடியேற்றி தமிழமக்களின் விகிதாசாரத்தை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது ஓரிருவர் குற்றவாளிகள் என்பதற்காக மொத்த ஊரையுமே தண்டிக்க முடியாது எனவே புலிச் சந்தேகநபர்கள் ஒரு பகுதியினர் இருப்பதாகக் கூறி ஒட்டுமொத்த வன்னி மக்களையம் நரக வேதனைக்குள் தள்ளியிருப்பது தேசிய சர்வதேச சட்டவிதிகளை மீறுகின்ற செயற்பாடுகளாகும் என்று மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுவிக்கப்பட்ட இந்து குருமார் யாழ் பயணம்!
Next post இந்திய முகவர் அமைப்பு விரைவில் பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இலங்கை விஜயம்!