மட்டக்களப்பில் சிங்கள மருத்துவர் கொலை தொடர்பில் புலிச் சந்தேகநபர் கைது!

Read Time:2 Minute, 58 Second

மட்டக்களப்பு நாவற்காடு அரசினர் வைத்தியசாலையில் சேவையாற்றிய சிங்கள மருத்துவரான சமரதிவாகர விக்கிரமசங்களாகே பாலித பத்மகுமார (வயது 28) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய புலி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்தவருடம் நவம்பர்மாதம் 16ம் திகதி தனது கடமையின் நிமித்தம் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்தபோது குறித்த வைத்தியரும், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கூலித்தொழிலாளி சக்தி எனப்படும் பேரின்பராஜா யோகேந்திரன் (35 வயது) என்பவர் அவரது வீட்டில் வைத்தும் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். சித்தாண்டியைச் சேர்ந்த 29வயதான புலி உறுப்பினர் எனக் கூறப்படும் தர்மலிங்கம் குமார் என்ற சந்தேகநபர் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே இக்கொலைகளுடன் தொடர்புடையநபர் என்பது தெரியவந்ததாகவும். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஒருதொகுதி ஆயுதங்கள் மறைவிடமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்நபர் கொடுத்த தகவலின்பேரில் கரடியனாறு ஆயித்தியமலை வீதியிலுள்ள சிவப்பு பாலத்திற்கு அருகிலுள்ள நாவல்மரத்திற்கு கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி -56 ரக துப்பாக்கிகள் – 03, அதற்கான மகசீன்கள் – 04, ரவைகள் 197, நான்கு பக்கமும் சிதறி வெடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட 20 கிலோ எடையுடைய நவீன ரக கண்ணி வெடி – 01 போன்ற ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் பியரத்ன தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் படையினரின் அவதானத்தை திருப்புவதற்காக சிங்கள உயர்அதிகாரி ஒருவரைக் கொலைசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த சந்தேகநபர் தமது விசாரணைகளின்போது தெரிவித்தார் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிதிவெடி அகற்றும் இயந்திரங்களை இலங்கை அரசு கொள்வனவு!
Next post சனல்4 வீடியோ திட்டமிட்ட வகையில் புனையப்பட்டதாகும் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய!