ஸ்ரீலங்கா ரெலிகொமின் 42வீதபங்கு புலிகளுக்கு சொந்தம்

Read Time:1 Minute, 53 Second

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் 42வீதத்தை தாம் வாங்குவதற்காக விடுதலைப்புலிகள் மலேசியாவிலுள்ள மக்ஸிஸ் ஊடாக முதலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இலங்கை தேசிய தொலைத்தொடர்பு சேவையான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவதற்காக இந்த பங்குகளை வாங்கும்படி கே.பி அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீலங்கா ரெலிகொமின் 51.23வீத பங்குகள் அரசாங்கத்துக்கு உரியன 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி மக்ஸிஸ் நிறுவனம் 320மில்லியன் ரூபா முதலிட்டு 42வீத பங்குகளை வாங்கியுள்ளது. தொலைத்தொடர்பு பிரிவின் தலைவர் ஒருவரும் அவரது சகோதரரும் இந்த வியாபாரத்தை நடத்திக் கொடுத்ததாகவும் அதற்காக மக்ஸிஸ் அவர்களுக்கு 1மில்லியன் ரூபா தரகுப்பணம் செலுத்த ஒப்புக் கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தேசிய பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அதில் இணைந்த போது அந்த உடன்படிக்கை முறிந்து விட்டது. ஸ்ரீலங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரியை அவருக்கு போதிய தகுதிகள் இல்லாதபோதும் நியமனம் செய்தது மக்ஸிஸ் என்றும் அவருடைய சம்பளம் 13மில்லியன் ரூபா என்றும் ஒருசெய்தி தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு உறுகாமத்தில் கிரனைட் வெடித்ததில் மாணவர்களான சகோதரர்கள் இருவர் காயம்
Next post அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் வெளியேற்றப்படுவர் -இராணுவத்தளபதி தெரிவிப்பு