இலங்கை நீதிபதிகள் அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்ல விஸா அனுமதி மறுப்பு
Read Time:51 Second
நிகழ்வு ஒன்றுக்காக பிஜி தீவுக்கு புறப்பட்டுள்ள இலங்கை நீதிபதிகளும் நீதவான்களும் அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்வதற்கான விஸா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் கொரியாவின் ஊடாக பிஜிக்கு வருகை தருவதாக பிஜியின் பிரதம நீதியரசர் அந்தனி கேட்ஸ் தெரிவித்துள்ளார். பிஜிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
Average Rating