ஜனாதிபதியிடம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள்..

Read Time:1 Minute, 42 Second

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வசம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளதாகவும், பாதுகாப்பு, நிதித் திட்டமிடல், துறைமுக விமானசேவைகள், பெருந்தெருக்கள் ஆகிய நான்கு துறைகளுக்குமான அமைச்சுப் பொறுப்புகளே இவையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பும் இருவருக்கு பிரதியமைச்சுப் பதவிகளும் இந்த அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி முரளிதரன் மீள் குடியேற்ற பிரதியமைச்சராகவும் முத்து சிவலிங்கம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றவும் -ஜனாதிபதி
Next post கெஹெலியவிற்கு ஊடகஅமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது