EPDP அமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவரால் விடுக்கப்பட்டு இருக்கும் கொலை அச்சுறுத்தலை அடுத்து சாவகச்சேரி நீதவானின் வாசஸ்தலத்திற்கு கடும் பாதுகாப்பு

Read Time:3 Minute, 32 Second

ஈ.பீ.டீபி அமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவரால் விடுக்கப்பட்டு இருக்கும் கொலை அச்சுறுத்தலை அடுத்து சாவகச்சேரி நீதவான் பிரபாகரனின் வாசஸ்தலத்திற்கு பொலிஸ் மற்றும் ராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் யாழ் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ் மாவட்ட இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவை அடுத்தே இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. யாழ் நகரில் பாண்டியன் தாழ்வுப் பகுதியில் உள்ள அவரது வாசஸ்தலத்திற்கு இப்போது 2 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஈ.பீ.டீ.பீ அமைப்பின் தென்மராட்சி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளருமான சாள்ஸ் என்றழைக்கப்படும் அலெக்ஸ்சாண்டர் சூசைமுத்து மற்றும் யாழ் மாநகர சபையின் துணை முதல்வரான றேகன் என்றழைக்கப்படும் துரைராஜா இளங்கோ ஆகிய இருவருக்கும் எதிராகவே கொலைமுயற்சி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதனிடையே குறித்த இருவரும் ஆயதங்கள் சகிதம் அப்பகுதியில் நடமாடி உள்ளமை மற்றும் நீதவானின் வாசஸ்தலத்தில் உட்பிரவேசிக்க முற்பட்டமை தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கடிதங்கள் மூலம் சாவகச்சேரி நீதிமன்றிற்குத் தகவல் அனுப்பி உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக இன்று நீதிமன்றில் பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க சாவகச்சேரி பொலிசாருக்கு நீதவான் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஈ.பீ.டீ.பீ அமைப்பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் அரச அதிபர், யாழ்மாவட்ட ராணுவத் தளபதி, நீதி அமைச்சின் செயலாளர் யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கும் உரிய தகவல்களை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

கப்பம் கோரிக் கடத்தப்பட்ட மாணவன் கபிலநாத் தொடர்பான விசாரணைகளை முடக்கவே இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கபிலநாத் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள ஈ.பீ.டீ.பீ அமைப்பின் அலுவலகத்தில் 12 வருடங்களுக்கு மேல் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. அந்த அலுவலகத்திற்கு பொறுப்பாகவே சாள்ஸ் என்றழைக்கப்படும் அலெக்ஸ்சாண்டர் சூசைமுத்து இதுவரைகாலமும் செயற்பட்டு வந்ததாக தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்?
Next post நான் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தியின் தீவிர ரசிகை.. – நடிகை குஷ்பு