ஜி15 நாடுகளின் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி வசம்..!

Read Time:2 Minute, 8 Second

தெஹ்ரானில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கின்ற ஜி15 நாடுகளின் தலைமை பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதியாட்டிடமிருந்து பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜி15 நாடுகள் உலகின் மூன்றிலொரு சனத்தொகையை கொண்டுள்ளதுடன் இது உலகின் பெரும் பொருளாதாரங்கள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளது அதில் ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈரானிய இஸ்லாமிய குடியரசு, ஜெமேக்கா, கென்யா, மலேசியா, மெக்ஸி;க்கோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசுலா மற்றும் சிம்பாவே ஆகிய 17வளர்முக நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிறேட்டில் 9வது அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டின் போது இக்குழு ஸ்தாபிக்கப்பட்டதுடன் வளர்முக நாடுகளிடையே வலுவானதும் பரஸ்பர நன்மை பயக்ககூடியதுமான மேம்பாட்டிற்கான குறிக்கோளைக் கொண்டுள்ளது. தெஹ்ரானில் இடம்பெறவுள்ள ஜீ15 நாடுகளது மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொள்வதற்காக இந்தவார இறுதியில் ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்ளிருந்தும் வெளியிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நினைக்கும் சக்திகள் :இரா.துரைரத்தினம் (கட்டுரை)
Next post வடக்கிலிருந்து 500பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு..முதல்கட்டமாக 367பேருக்கு பயிற்சி