இலங்கை மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் -ஐ.நா கவலை தெரிவிப்பு
இலங்கையில் மனிதாபிமான தொண்டுகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பினை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. மனிதாபிமான தொண்டுகளை முன்னெடுப்பதற்காக நிதி உதவிகளில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் பல நன்கொடையாளர்கள் உதவிகளை இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் முக்கிய மனிதாபிமான தொண்டுகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதென குறிப்பிடப்படுகிறது தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் நாடுகளினால் வழங்கப்பட்டு வந்த உதவிகள் பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் முக்கிய மனிதாபிமான தொண்டுகளை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை இணைப்பாளர் நீர் ஓ பூணே தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக 60வீதமான வீடுகள் மோசமடைந்துள்ளதாகவும் குறித்த பிரதேசங்களில் பொருளாதார நிலைமை மிகவும் பலவீனமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 337மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating