கிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா..

Read Time:1 Minute, 53 Second

இதுவரை கவர்ச்சிக்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம். அசல் படத்துக்குப் பின்னர் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார் பாவனா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.இதனால் சற்றே சோர்ந்து போய் விட்டாராம். வாய்ப்புகள் வராமல் போனதற்கு பாவனாவும் கூட ஒரு காரணம். முன்னணி நடிகர்களோடு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பதை ஒரு பாலிசியாகவை வைத்துள்ளதால் பீல்டில் படு ஹாட்டாக இருக்கும் பிற இளம் நாயகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

இதனால் வருத்தம் அடைந்திருந்த பாவனா, இந்த பட வாய்ப்புப் பஞ்சத்தைப் போக்க கவர்ச்சி கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். இதற்காக கவர்ச்சிகரமான போஸ்களுடன் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் ரவுண்டு அடிக்க விட்டுள்ளாராம்.

கிளாமர் களத்தில் குதித்து கோலிவுட்டில் தன்னை ஆணித்தரமாக நிரூபிக்க முடிவு செய்துள்ள பாவனா, சைடில், விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.

சினேகாவைப் போல திரைப்படங்களோடு விளம்பரங்களிலும் விறுவிறுப்பாக நடிக்கப் போகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி
Next post நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு