யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு விடுதலை..!

Read Time:1 Minute, 44 Second

யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் யாழ். மாவட்ட நீதிமன்றில் இன்று கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட கபில்நாத் என்ற மாணவரின் கொலை தொடர்பாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் யாழ். மாநகரசபை துணைமேயர் இளங்கோவன் யாழ். பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டார். இவர் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி பிரபாகரனின் வீட்டுக்கு அருகாமையில் ஆயுதங்களுடன் நடமாடிய குற்றச்சாட்டின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இளங்கோவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கெதிராக யாழ். குடாநாட்டில் வெளியாகும் பத்திரிகைகளில் சட்டத்தை அவமதிக்கும் வகையில் யாழ் மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மாநகரசபை ஆணையாளர் சிறீ சரவணபவன் ஆகியோர் விளம்பரங்களைப் பிரசுரித்திருந்தனர். இவர்கள் இருவரும் யாழ் நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய விடுதலையை நீதவான் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை..!
Next post வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயமும், பேச்சுவார்த்தையும்..!