திமுகவில் சேருவேனா? வடிவேலு
Read Time:1 Minute, 17 Second
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு அளித்த பேட்டி:
அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் தற்போது இல்லை. என்னை திமுகவில் இணையும்படி யாரும் வற்புறுத்தவும் இல்லை. மக்களுடன் மக்களாக இருந்து அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். திமுகவில் சேர வேண்டுமென முடிவெடுத்தால் அந்த முடிவில் இருந்து என்னை யாரும் தடுத்து விடமுடியாது. இவ்வாறு வடிவேலு கூறினார்.
Average Rating